full screen background image

பரீட்சைக்கு படிக்காமல் பிரஸ்மீட்டுக்கு ஓடி வந்த லட்சுமிமேனன்..!

பரீட்சைக்கு படிக்காமல் பிரஸ்மீட்டுக்கு ஓடி வந்த லட்சுமிமேனன்..!

நேற்று நடைபெற்ற ‘ஜிகர்தண்டா’ பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு ஹீரோயின் லட்சுமி மேனன் ஏன் வரவில்லை என்று நாம் கேட்ட முகூர்த்தம், இன்றைக்கு நடந்த பிரஸ் மீட் நிகழ்ச்சிக்கு ஆஜராகிவிட்டார்..

இத்தனை கோடிகளை செலவழித்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் அதே நட்சத்திரங்களை ஒன்று சேர்க்கத்தான் பெரும் கஷ்டப்படுவார்கள். இப்போதைய முன்னணி நட்சத்திரங்களில் சிலர் பிரஸ் மீட்டுக்கு வருவதற்குக்கூட தனியாக பணம் வாங்கிக் கொண்டுதான் வருகிறார்கள். பலரோ வரவே மாட்டார்கள்.. இதில் நயன்தாரா முக்கியமானவர்.

பிரஸ் மீட் நிகழ்ச்சியென்பது ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பு நடத்தப்படும் சம்பிராதய நிகழ்ச்சி அல்ல.. அந்தப் படம் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் ஒரு  முன்னோட்டம்தான். படத்தின் ரிலீஸுக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே இணையம், பத்திரிகை, டிவிக்கள் என்று அனைத்திலும் அதே படம் பற்றிய செய்திகளும், கிசுகிசுக்களும், பேட்டிகளும் தொடர்ந்து வந்தவண்ணம் இருப்பது அப்படத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் விளம்பரம்.. இதனை எந்தவொரு தயாரிப்பாளரும் இழக்க விரும்ப மாட்டார்.

ஆனாலும் சில நடிகைகளும், நடிகர்களும் வேறு ஷூட்டிங்கில் சிக்கிக் கொண்டால் சிக்கல்தான்.. தேதியை தள்ளிப் போட முடியாது என்பதால் அவர்கள் இல்லாமலேயே நடத்திவிடுவார்கள். இன்னும் ஒரு சிலர் வருவதற்கே சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு எஸ்கேப்பாகிவிடுவார்கள்..

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சிக்கு ஹீரோயின் காஜல் அகர்வால் வரவில்லையென்றும், இதனால் அந்நிகழ்ச்சிக்கு கிடைக்கவிருந்து கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்காமலேயே போய்விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளிப்படையாக புகார் செய்தார்.

படத்தின் துவக்கத்தில் பிரஸ்மீட், ஆடியோ ரிலீஸ் சமயங்களில் வரவேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டால்கூட அதனை பின்பற்றுபவர்கள் மிகக் குறைவு.

இந்த நேரத்தில் ‘ஜிகர்தண்டா’ நாயகி லட்சுமி மேனன் தனது 11-வது வகுப்பு பொதுத் தேர்வை நேற்று எர்ணாகுளத்தில் உள்ள தன்னுடைய பள்ளியில் எழுதினார். அதனால்தான் நேற்று காலை நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் வரவில்லை. இன்றைக்கு அவருக்கு பாடங்களை படிக்கக் கிடைத்த ஓய்வு நாள். நாளை ஒரு தேர்வு இருக்கிறது. இந்நிலையில் இன்றைய விடுமுறை நாளில் படிக்க வேண்டும் என்று சொல்லாமல், எர்ணாகுளத்தில் இருந்து பிளைட் பிடித்து சென்னைக்கு ஓடி வந்து பிரஸ்மீட்டில் கலந்து கொண்டிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது..!

ஒரு சின்னப் பொண்ணு.. 17 வயசுப் பொண்ணுக்குரிய இந்தப் பக்குவம்கூட திரையுலகில் நீண்ட வருடங்களாக இருக்கும் ஒரு சிலருக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது..!

வெல்டன் லட்சுமி மேனன்..!

Our Score