பொங்கல் தினத்தில் வெளியாகிறது ‘குற்றம் 23’

பொங்கல் தினத்தில் வெளியாகிறது ‘குற்றம் 23’

அருண் விஜய் நடிப்பில், மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும் ‘குற்றம்-23’ திரைப்படம், வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.

‘ஈரம்’ அறிவழகனின் இயக்கத்தில்  ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்பை பெற்றிருக்கும் இந்த திரைப்படத்தை, ‘ரெதான் – தி  சினிமா  பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கிறார்.

மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த ‘குற்றம்-23’ படத்தில், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன், படத் தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றியிருப்பது மேலும் சிறப்பு.  

“நல்ல நாளன்று திரைப்படத்தை வெளியிடுவதுதான் எல்லா தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருக்கும். அந்த வகையில், தயாரிப்பு துறையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்திருக்கும்  எனக்கு, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடுகின்ற பொங்கல் திருநாள் அன்று ‘குற்றம்-23’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது.

பொங்கல் திருநாளை கொண்டாடும் ஒவ்வொரு ரசிகர்களின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கும் சிறப்பம்சங்கள் எங்கள் ‘குற்றம்-23’ படத்தில் முழுமையாக நிறைந்திருக்கின்றது….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘குற்றம்-23’ படத்தின் தயாரிப்பாளரும்,  ‘ரெதான் – தி  சினிமா  பீப்பல்’ நிறுவனத்தின் நிறுவனருமான இந்தெர் குமார்.

Our Score