full screen background image

பெண் துப்பறியும் நிபுணராக த்ரிஷா நடிக்கும் ‘குற்றப் பயிற்சி’ திரைப்படம்

பெண் துப்பறியும் நிபுணராக த்ரிஷா நடிக்கும் ‘குற்றப் பயிற்சி’ திரைப்படம்

ஸ்ரீகுருஜோதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் G.விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘குற்றப் பயிற்சி’.

இத்திரைப்படத்தில், பெண் துப்பறிவாளராக முதன்மை கதாபாத்திரம் ஏற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை திரிஷா. மேலும் இப்படத்தில் சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – G. விவேகானந்தன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வர்ணிக், ஒளிப்பதிவு – பாபு குமார் I.E., இசை – ரதன், படத் தொகுப்பு – மதன், கலை – பாலசந்தர் C.S., புகைப்படம் – வெங்கட்ராம், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், உடைகள் வடிவமைப்பு – நிகிதா, வாசுகி பாஸ்கர், உடைகள் – அருண் குமார், டிசைனர் – யுவராஜ், நடனம் – பாபா பாஸ்கர், கிஷோர், தயாரிப்பு மேற்பார்வை – சஷி T.V, மக்கள் தொடர்பு – நிகில்.

‘தாரைத் தப்பட்டை’ படத்தில் இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய வர்ணிக் இப்படத்தின்  மூலம்  இயக்குநராக அறிமுகமாகிறார்.

1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு கொலையையும், அந்தக் கொலையின் பின்னணியையும்  துப்புதுலக்கும்விதமாக விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் முதன்மை கதாபாத்திரம்  பெண் துப்பறிவாளராக  இருப்பது இதுவே முதல் முறை. முதல் இந்திய பெண் துப்பறிவாளரான ரஜினி பண்டிட்டை உத்வேகமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

 

Our Score