full screen background image

நடிகர் விஷ்ணு மஞ்சுவிற்கு சிறப்பான அறிமுகத்தைக் கொடுக்கப் போகும் ‘குறள் 388’ திரைப்படம்

நடிகர் விஷ்ணு மஞ்சுவிற்கு சிறப்பான அறிமுகத்தைக் கொடுக்கப் போகும் ‘குறள் 388’ திரைப்படம்

தெலுங்கு நடிகரான விஷ்ணு மஞ்சு தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ‘குறள் 388’.

தமிழில் ‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற படங்களில் நடித்திருந்த சுரபி இந்த ‘குறள் 388’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சம்பத் ராஜ், நாசர், பிரகதி, பெசன்ட் நகர் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – GS கார்த்திக், தயாரிப்பாளர் – சுதீர்  குமார் புடோட்டா, இணை தயாரிப்பாளர் – கிரண் தனமாலா, ஒளிப்பதிவு  – ராஜேஷ் யாதவ், இசை – SS தமன், படத் தொகுப்பு – K L பிரவீன், கலை இயக்கம் – கிரண் மன்னே, மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, ரியாஸ் கே அஹ்மது.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் ‘388-வது’ குறளின் கருத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

தேர்தலின்போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல்வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே ‘குறள் 388’ படத்தின் கதையாகும்.  

இத்திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. தெலுங்கில் ‘வோட்டர்’ என்ற தலைப்பில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்த ‘குறள் 388’ திரைப்படத்தின் முதல் பார்வை கடந்த புதன்கிழமையன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஹீரோ விஷ்ணு மஞ்சு தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டார்.

பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின்  படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிச்சாமி,  ஸ்டாலின் உள்பட பல கட்சித் தலைவர்கள் படமும் இந்த முதல் பார்வையில் இடம் பெற்றிருந்தது.

இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

“விஷ்ணு மஞ்சுவிற்கு ‘குறள் 388’, தமிழில் நல்ல ஒரு அறிமுக படமாக அமையும்…” என்று படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.  

 

Our Score