ஜி.வி.பிரகாஷின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்தப் போகும் ‘குப்பத்து ராஜா’ திரைப்படம்

ஜி.வி.பிரகாஷின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்தப் போகும் ‘குப்பத்து ராஜா’ திரைப்படம்

தொடர்ச்சியாக வெற்றிகளை ருசித்துக் கொண்டிருக்கும் இளம் ஹீரோவான G.V.பிரகாஷ், பிரபல நடன இயக்குநரான பாபா பாஸ்கர் முதல் முறையாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘குப்பத்து  ராஜா’ என்ற  சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பை சூட்டியுள்ளனர்.

இந்தப் படத்தில்  G.V.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பார்த்திபன், M.S.பாஸ்கர், யோகி பாபு மற்றும் ‘ஜாங்கிரி’ மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

G.V.பிரகாஷ் இசையில், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில், பிரவீன் K.L.  படத் தொகுப்பில், அன்பு அறிவு மற்றும் திலிப் சுப்புராயன் சண்டையமைப்பில், D.R.K. கிரணின் கலை இயக்கத்தில் இந்த ‘குப்பத்து ராஜா’ திரைப்படம் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தினை ‘S Focuss’ நிறுவனத்தின் சார்பில் எம்.சரவணன், எஸ்.சிராஜ் மற்றும் T. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்களோடு படூர் ரமேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளர் கர்ணா ராஜா.

kuppathu raja-2

”சினிமா ரசிகர்களின் ரசனையை  பல காலமாக விநியோகஸ்தர்களாக இருந்து கண்டறிந்ததால், சினிமா தயாரிப்பில் கால் எடுத்துவைக்க முடிவு செய்தோம்.

தயாரிப்பாளர்களின் விருப்பமாகவும், இன்றைய இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்படும் கதாநாயகனாக இருப்பவர் G.V.பிரகாஷ். அவரது கதாநாயகன் அந்தஸ்து கூடி வருவதை எல்லோரும் காணலாம்.

‘குப்பத்து ராஜா’ படத்தின் கதையை பாபா பாஸ்கர் அவர்கள் எங்களிடம் கூறியபொழுது நாங்கள் ஆச்சிரியப்பட்டோம். பிரபல நடன ஆசிரியரான அவருக்குள் இப்படி ஒரு திறமையான  இயக்குநர் இருக்கிறார் என்பது எங்களுக்கு அன்றுதான் தெரிந்தது. அவரது படமாக்கும் முறையும் எங்களை மிகவும் கவர்ந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றி பெற்ற தலைப்பு என்பது மட்டுமில்லாமல், இந்தக் கதைக்கும் ‘குப்பத்து ராஜா’ என்கிற தலைப்பு மிக சரியாக பொருந்தியதால் அந்தத் தலைப்பையே வைத்துள்ளோம்..” என்கின்றனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து post production பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வரும் கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்களில் இப்படம் ரிலீசாகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

Our Score