ஜெய் – அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் உண்டாக்கிய சினிஷின் ‘பலூன்’ தற்பொழுது மற்றோரு பலமான இன்னொரு கூட்டணியை அமைத்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத் சுவாரஸ்யமான ஒரு பாடலை பாடியுள்ளார். யுவன் – அனிருத்தின் இந்தக் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது.
”ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு விளம்பர யுக்திகளும் முக்கியம் என்பதை நம்புபவன் நான். இன்றைய சினிமாவில் விளம்பர யுக்திகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. சுவாரஸ்யமான கூட்டணிகளை அமைப்பது படத்தின் விளம்பரத்திற்கு பேராதரவாக இருக்கும்.
‘பலூன்’ படத்தின் ஒரு பாடலிற்கான விவாதத்தில் நானும் அதன் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா இருந்தபொழுது ஓவியாவின் பிரபலமான ‘நீங்க shut up பண்ணுங்க’ என்ற வரி எங்களுக்கு தோன்றியது. இந்த யோசனையை யுவனிடம் கூறிய பொழுது அவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதனை அனிருத் பாடினால் அசத்தலாக இருக்கும் என்று கூறினார். இது குறித்து தயக்கத்துடன் நான் அனிருத்தை அணுகியபொழுது அவர் மறு யோசனையின்றி உடனே பாட சம்மதித்தார்.
யுவனும், அனிருத்தும் ஒன்று சேர்ந்து எந்தவித ஈகோவும் இன்றி ஒன்று சேர்ந்து பணியாற்றி கலக்கியுள்ளனர். அவர்கள் இருவரிடையே ஒருவர் மீது மற்றொவர் வைத்திருக்கும் மரியாதை அழகாக இருந்தது. இவர்கள் இருவரின் அழகான நட்பு இப்பாடலின் தரத்திலும் வெளிப்பட்டுள்ளது.
இந்த ‘நீங்க shut up பண்ணுங்க’ பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்படும் என உறுதியாக நம்புகிறேன். இப்பாடலின் ப்ரோமோவை வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியிடவுள்ளோம்.
இந்தப் பாடல், திறமை கொண்ட சாதித்த இரு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பணிபுரிய முடியாது என கூறுபவர்களை ‘shut up பண்ணுங்க’ என்பதை உணர்த்தும்.
இந்தப் படத்தின் மற்றொரு பாடலான ‘மழை மேகம் நீயாட’ பாடலை யுவனின் பிறந்த நாளான வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று வெளியிடவுள்ளோம்…” என துள்ளலோடு கூறினார் புதுமுக இயக்குநர் சினிஷ்.