full screen background image

நடிகர் சரண்ராஜ் கதை எழுதி, இயக்கும் படம் ‘குப்பன்’

நடிகர் சரண்ராஜ் கதை எழுதி, இயக்கும் படம் ‘குப்பன்’

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ்.

நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதாபாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர்.

நடிகர் சரண்ராஜ் தற்போது குப்பன்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் புதிய படத்தை Soni Sri Production நிறுவனம் தயாரிக்கிறது.

பைலட்டாக இருந்து, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்ட சரண்ராஜின் இரண்டாவது மகனான தேவ் சரண்ராஜ், இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இன்னொரு நாயகனாக ஆதி தேவ் அறிமுகமாகிறார். இவர்களுடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாசலம் இருவரும் நாயகிகளாக அறிமுகமாகுகிறார்கள்.

மேலும் சரண்ராஜும் நீண்ட நாள்களுக்கு பின் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகன் தேவ் சரண்ராஜின் மாமனாக சரண்ராஜ் நடித்து வருகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சரண்ராஜ், ஒளிப்பதிவு – ஜனார்த்தன், இணை இயக்கம், பாடல்கள் – K.சுரேஷ் குமார், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, சண்டை பயிற்சி இயக்கம் – ஓம்ஹார், இசை – எஸ்.ஜி.இலை, நடனப் பயிற்சி இயக்கம் – டயானா, தயாரிப்பு நிர்வாகம் – தங்கராஜ், பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன்.

ஒரு குப்பத்து மீனவ இளைஞனுக்கும், மார்வாடி பெண்ணுக்கும் இடையில் நடக்கும் காதல் கதைதான் இந்தப் படம்.

இந்தப் படம் உருவானவிதம் பற்றி இயக்குநர் சரண்ராஜ் பேசும்போது, “நான் கடந்த 35 வருடங்களாக சென்னை, பாலவாக்கத்தில்தான் குடியிருக்கிறேன். தினமும் காலையில் நான் வளர்க்கும் நாயை கூட்டிக் கொண்டு அந்தக் கடற்கரை வழியாகத்தான் வாக்கிங் போவதுண்டு. அப்போது பல பேர் பழக்கமாகி அவர்களுடன் அரட்டை அடித்திவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்.

அப்படிதான் குப்பன் என்ற ஒரு மீனவருடன் எனக்கு பழக்கமானது. அப்போதுதான் எனக்குள் அந்த மனிதரின் கதையை நாம் ஏன் எழுதக் கூடாது என்று தோன்றியது. கதையை எழுதி முடித்ததும் அந்த நண்பரின் பெயரையே கதைக்குத் தலைப்பாகவும் வைத்துவிட்டேன். அதுதான் இந்தக் குப்பன்’ படம்.  அவரும் இந்தப் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்…” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் ஆரம்பமாகி விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.

விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும்.

Our Score