கேயார் எதுவுமே செய்யவில்லை-தேனப்பன் தாக்குதல்..!

கேயார் எதுவுமே செய்யவில்லை-தேனப்பன் தாக்குதல்..!

மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதை போல தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்தாலும்,  அதில் இரு அணிகளாக நின்று மோதியவர்களின் மனக்கசப்பு மட்டும் தீரவில்லை போலும்..!

தற்போதைய தலைவர் கேயார் தலைமையில் புதிய அணி தலைமையேற்றாலும் தயாரிப்பாளர்களுக்கு எதையும் உருப்படியாகச் செய்யவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரான தயாரிப்பாளர் தேனப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று நடைபெற்ற ‘வீரன் முத்துராக்கு’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியபோது தயாரிப்பாளர் சங்கம் பற்றி ரொம்பவே ஆதங்கப்பட்டார் தேனப்பன்.

“கேயார் தலைமைல புதிய டீம் வந்தும் தயாரிப்பாளர்களுக்கு இதுவரையிலும் எதுவும் செய்யலை.. வாரத்துக்கு 7 படங்கள் ரிலீஸாகுது.. இதுல 4 படங்கள் சின்ன பட்ஜெட் படங்கள்.. இந்தப் படங்களோட போஸ்டர்களை ஒட்டக்கூட இங்க இடமில்லை.. இசை வெளியீட்டு விழான்னு சொல்லி அவங்களே இருக்குற இடமெல்லாம் போஸ்ட் ஒட்டிர்றாங்க.. புதுசா ரிலீஸாகப் போற படத்தோட போஸ்டரை ஒட்டவே இடம் கிடைக்கலை.. இனிமேல் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இசை வெளியிட்டு விழாக்கள் நடத்தக் கூடாதுன்னு  ஒரு சங்கத்துல கட்டுப்பாடு கொண்டு வரணும்.. சின்ன பட்ஜெட் படங்களுக்கு போஸ்டர் ஒட்ட இடம் கிடைக்காததால் அவங்க வர்றதே மக்களுக்குத் தெரியறதில்லை.. இதையெல்லாம் தயாரிப்பாளர் சங்கம் மனசுல வைச்சுக்கிட்டு செயல்படணும்..” என்றார்.

இதுவரையிலும் யாருக்குமே தோணாதவகையில் ஒரு புதிய விஷயத்தைத் தொட்டுச் சென்றுள்ளார் தேனப்பன். எல்லா இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் வரும் கேயார் இன்றைக்கு நிகழ்ச்சிக்கு வரவில்லையென்பதால் இதற்கான பதிலை வேறொரு நிகழ்ச்சியில் தெரிவிப்பார் என்று நம்புகிறோம்..!

Our Score