ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் கார்த்தி, நடிகை லட்சுமிமேனன் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கியிருக்கும் ‘கொம்பன்’ திரைப்படம் பற்றி இன்றைய தேதிக்கு பல சர்ச்சைகள் அரசியல் உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த ‘கொம்பன்’ திரைப்படத்தை தடை செய்யும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டார்.
கிருஷ்ணசாமியின் இந்த போராட்டத்தை ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாகக் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.
இ்ப்போது இந்த சர்ச்சைகள் குறித்து படத்தின் தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை இங்கே :
படத்தின் மையக்கரு ஒரு மாமனாருக்கும், மாப்பிள்ளைக்கும் இடையில் நடக்கும் பனிப்போர்தான் என்கிறது தயாரிப்பு தரப்பு.
சென்சாரில் படம் பார்த்தவர்களும் ஆட்சேபணைக்குரியவைகள் படத்தில் எதுவுமில்லை என்று சொல்லித்தான் ‘யு’ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கு மேலும் பிரச்சினை கொடுத்தால் எப்படி..? படம் வெளியாகும்வரையில் காத்திருந்து படத்தைப் பார்த்துவிட்டு அதன் பின்பு சாதி கருத்துக்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இருந்தால் அப்போது எதிர்க்கலாமே..? இதுதானே நியாயம்..?
படத்தைப் பார்க்காமலேயே எதிர்த்தால் எப்படி..?