‘ஸ்ரீபாலாஜி மகிமை’ படத்தின் இசை வெளியீடு கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில கவர்னர் டாக்டர் ரோசய்யா படத்தின் பாடல் சிடியை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள், இப்படத்தில் பாடல் பாடிய உன்னி கிருஷ்ணன், சரிகம நிறுவனத்தின் சென்னை மேலாளர் ஆனந்த், நடிகர் சின்னி ஜெயந்த், ரங்கநாயகலு மற்றும் இப்படத்தில் பணியாற்றியவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
இப்படத்தில் சாய்கிரண் ‘ஸ்ரீ பாலாஜி’ கடவுளாகவும், படத்தின் இயக்குனர் கோபால்ராம் பக்தராகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மற்றும் டெல்லி கணேஷ், வையாபுரி, விச்சு, விஜய் பாலாஜி, தமிழ்மணி, ஸ்ரீவித்யா, டப்பிங் ஜானகி, சங்கீதா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
“கடவுள் கொடுக்கும் வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அதனைத் தவறான வழியில் பயன்படுத்தும் மனிதன் தவறு செய்யும்போது கடவுள் நேரில் வந்து அற்புதங்களை நிகழ்த்தியும் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல விஷயங்களை சொல்வதையும் சுவைபடச் சொல்லும் படம்தான் இது..” என்கிறார் படத்தின் இயக்குநர் கோபால் ராம்.
இதன் படப்பிடிப்பு சென்னை, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதியில் நடைபெற்றது. பார்த்தசாரதி மற்றும் ராஜ்பாஸ்கர் என்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து இசை மழை பொழிந்திருக்கிறார்கள். பாடல்களை பன்னீர் செல்வம் எழுதியிருக்கிறார். இப்பாடல்களை உன்னி கிருஷ்ணன், சாகேத், பானு, சமீரா ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஸ்பெஷல் எஃபெக்ட், பின்னணி இசைச் சேர்ப்பு உள்ளிட்ட சில வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மே மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :
கதை – திரைக்கதை – இயக்கம் – எம்..வி. கோபால் ராம்,
ஒளிப்பதிவு – ராம் யோகா
இசை – பார்த்தசாரதி , ராஜ்பாஸ்கர்
பாடல்கள் – பன்னீர் செல்வம்
எடிட்டர் : சுந்தர்
நடனம் : பவர் சிவா
மக்கள் தொடர்பு: S.செல்வரகு
தயாரிப்பு : எம்.ஜி.எஸ் பிலிம்ஸ்









