நாட்டில் வேலை வெட்டியில்லாத ஆபீஸர்கள் நிறைய பேர்களுக்கு இப்போதைய பொழுதுபோக்கே பிரபலங்கள் பெயரில் சமூக வலைத்தள அக்கவுண்ட் ஆரம்பித்து அவர்களைக் கதற விடுவதுதான்.
லேட்டஸ்ட்டாய் இன்று சிக்கியிருப்பது ‘கொம்பன்’ படத்தின் இயக்குநர் முத்தையா.
இவருடைய புகைப்படத்தை போட்டு டிவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்த ஒரு அன்பர் அடுத்து நான் இயக்கும் படத்திற்கு திவ்யா ஹீரோயின் இல்லை. எனக்கு லட்சுமி மேனனைத்தான் பிடிக்கும். அவரைத்தான் நடிக்க வைக்க முயற்சி செய்கிறேன் என்கிற லெவலில் எழுதித் தள்ளியிருக்கிறார்.
பல பிரபலங்களும் பல இணையத்தளங்களும் இவர்தான் முத்தையா போலிருக்கு என்றெண்ணி இந்தச் செய்தியையும் உண்மையாக்கி வெளியிட்டுவிட்டன.
தாமதமாக இதை அறிந்து கொண்ட இயக்குநர் முத்தையா.. ஐயாமார்களே.. சத்தியமா நான் டிவிட்டர், பேஸ்புக், பிளாக் எதுலயுமே இல்லை. என் பொழப்பு சினிமா இயக்குவதுதான். என்னை ஆளை விடுங்க என்று கதறியபடியே இன்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அந்த டிவிட்டர் அன்பர் இந்தக் கதறலைக் கேட்டவுடன் கொஞ்சம் மனசிரங்கி தன்னுடைய போலி அக்கவுண்ட்டை மூடி வைத்திருக்கிறார்.
இப்படி எத்தனை பேர் எங்கிட்டிருந்துதான் கிளம்பி வர்றாய்ங்களோ தெரியலையே..?