தற்போது பல இளைய நடிகர்களுமே ஒரு விஷயத்தில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த படம் பற்றி உறுதிப்படுத்திவிடுகிறார்கள். இதனால் தொடர்ச்சியாக அவர்கள் வேலை செய்ய இருப்பதும், கால்ஷீட் பிஸி என்பதும் திரையுலகில் உறுதிப்படுத்தப்படுகிறதாம்.
இப்போது ‘திருநாள்’ படத்தில் நயன்தாராவுடன் நடித்திருக்கும் நடிகர் ஜீவா, தான் அடுத்து நடிக்கப் போகும் படத்தினை அறிவித்திருக்கிறார்.
படத்தின் பெயர் ‘ஜெமினி கணேசன்’. அறிமுக இயக்குநர் முத்துக்குமார் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் நடிப்பவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.
இப்படத்தின் தலைப்பிற்காக மறைந்த நடிகர் திரு.ஜெமினி கணேசனின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றுள்னராம்.
இன்னும் சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன்னு ஆரம்பிச்சிர வேண்டியதுதான்..
கோடம்பாக்கத்துல டைட்டிலுக்கு அம்புட்டு பஞ்சம் போலிருக்கு..!