ஈராஸ் இண்டர்நேஷணல் மீடியா லிட் இந்திய திரையுலகில் ஒரு மாபெரும் சர்வதேச நிறுவனம். ‘கோச்சடையான்’ திரைப்படத்தை ஒரு உயர் தொழில் நுட்பத்தில் வெகு விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீடியா ஒன் க்ளோபல் லிமிட்டடுடன் இணைந்து மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.
சௌந்தர்யாவின் இயக்கத்தில் உருவாகிய இந்தத் திரைப்படம் மே 9 ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, பஞ்சாபி என்று ஆறு இந்திய மொழிகளில் உலகமெங்கும் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்தப் படம் உலகில் பல நாடுகளில் 6000 பிரிண்டுகளுக்கு மேல் திரையிட வேண்டி, 2-டி மற்றும் 3-டியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய அளவில் ரிலீஸ் செய்வதற்கு பல பிரிண்ட்கள் தேவையான நிலையில் சில தொழில் நுட்ப காரணங்களினால் ‘கோச்சடையான்’ படம் மே 23-க்கு ஒத்திப் போடப்பட்டுள்ளது.
‘கோச்சடையான்’ குழுவினரே மிகுந்த ஆவலுடன் மே 9-ஐ எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனாலும் தவிர்க்க முடியாத, எதிர்பார்க்காத சில தொழில் நுட்ப காரணங்களினாலும் 2-டி மற்றும் 3-டியில் தயாராக வேண்டியதாலும் இப்படி தேதியை மாற்றும் ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களுடைய ஆரவாரம் அட்டகாசமாக ஆரம்பித்துள்ளதை உணர்கிறோம். அவர்கள் மகிழ்ந்து ரசிப்பதற்கு ‘கோச்சடையான்’ திரையரங்குகளை நோக்கி இன்னும் இரண்டு வாரங்களில் வந்துவிடும்.
‘கோச்சடையான்’ மிக நுணுக்கமாக, ‘சலனப் பதிவாக்கம்’ என்னும் தொழில் நுட்பத்தில் எடுக்கப்படும் படமாகும். இப்படத்தில் நம் சூப்பர் ஸ்டார் இரண்டு வேடங்களில் நடத்துள்ளார். தீபிகா படுகோனே, சரத்குமார், நாசார், ஆதி, ஷோபனா மற்றும் ருக்மணி நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட தயாரிப்பிற்கு ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்னுமொரு ஆஸ்கர் வின்னர். ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவாக்கம் செய்துள்ளார்.
உலக அளவில் பெருமை வாய்ந்த பைன் உட் ஸ்டுடியோஸ், மற்றும் லண்டன் சென்ட்ராய்டு ஸ்டுடியோஸை சேர்ந்த பல உயரிய தொழில் நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளனர். தென் இந்தியாவை சேர்ந்த கலை வல்லுநர்களும், சீனாவை சேர்ந்த பல வல்லுநர்களும் இத்திரைப்படத்தில் வேலை செய்துள்ளனர்.
சர்வதேச புகழ் பெற்ற படங்களான ‘வேர்ல்டுவார் – 2’, ‘பைரைட்ஸ் ஆப் கார்பியன்’, ‘அயன்மேன் – 2’, ‘ஹாரிபாட்டர்’, ‘பெவர்லி ஹில்ஸ்’ போன்ற படங்களுக்கு அனிமேஷன் வொர்க் செய்த ஸ்டுடியோதான் நம் ‘கோச்சடையான்’ படத்துக்கும் அனிமேஷன் வேலைகளைச் செய்துள்ளது.
மே 23 அன்று உலகமெங்கும் 2-டி மற்றும் 3-டி-யில் ‘கோச்சடையான்’ மக்களை மகிழ்விக்க விரைந்து வருகிறார்.









