full screen background image

கோச்சடையான் வீடியோவை தமிழ்ல டப் செய்யுங்க-ஏவி.எம்.சரவணன் வேண்டுகோள்..!

கோச்சடையான் வீடியோவை தமிழ்ல டப் செய்யுங்க-ஏவி.எம்.சரவணன் வேண்டுகோள்..!

நேற்றைய கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ஏவி.எம்.சரவணன் ஸார் பேச வந்தபோது, “வைரமுத்துவை முன்னாடியே கூப்பிட்டு பேசவிட்டுட்டு, பின்னாடி எங்களை கூப்பிட்டா என்ன பேசுறது..? அவர்தான் ஏ டூ இஸட் எல்லாத்தையும் பேசிட்டு போயிட்டாரே..? என்று கலகலப்பாகவே ஆரம்பித்தார்.

kochadaiyaan-audio-3

“இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோஸை பார்த்தேன். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கு. அதை கொஞ்சம் தமிழ்ல டப்பிங் செஞ்சு தமிழ்நாடு முழுக்க தியேட்டர்கள்ல டிரெயிலர்கூட ரிலீஸ் செஞ்சீங்கன்னா படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆங்கிலத்துல அப்படியே ரிலீஸ் செஞ்சா மக்களுக்கு புரியாது.. இதை மட்டும் கொஞ்சம் மாத்திச் செய்யுங்க” என்றார்..

கே.எஸ்.ரவிக்குமாரைத் தவிர இந்தக் கோச்சடையான் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் இந்த மேக்கிங் வீடியோஸில் ஆங்கிலத்தில்தான் பேசியிருக்கிறார்கள் ரஜினி உட்பட. .

இதனை இங்கே பிரமோட் செய்யவும் முடியாது. ஒரே நேரத்தில் தெலுங்கு, இந்தி, மராத்தி போஜ்பூரி வங்காளம் ஆகிய மொழிகளில் டப் ஆவதால் அவர்களுக்குப் பயன்படலாம். தமிழர்களுக்கு தமிழில் மாற்றித்தானே ஆக வேண்டும்..!

Our Score