full screen background image

ரஜினி ரசிகர் மன்ற மாநாட்டைக் கூட்ட வேண்டும்-எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள்..!

ரஜினி ரசிகர் மன்ற மாநாட்டைக் கூட்ட வேண்டும்-எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள்..!

ரஜினி தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து மாநில மாநாடு போல் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கேட்டுக் கொண்டார்.

kochadaiyaan-audio-17

நேற்று நடைபெற்ற கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, “ரஜினிகூட 25 படம் செஞ்சிருக்கேன்.. அப்பவும் போலத்தான் இப்பவும் இருக்கிறார்.. என் படத்துல நடிக்கும்போதுதான் லவ் பண்ணினார்.. என் படத்துல நடிக்கும்போதுதான் கல்யாணம் செஞ்சார். என் படத்துல நடிக்கும்போதுதான் புள்ளை பெத்துக்கிட்டார்… அவருடைய மனைவி லதாவைவிட அதிகமா நான்தான் அவர்கூட இருந்திருக்கேன்.. நானும், அவரும் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறோம்.

…………….. ரஜினியிடம் இப்போது ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.. அவருடைய ரசிகர்கள் பல காலமாக அவரைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு முன்னர் பல ரசிகர் மன்ற கூட்டங்களுக்கு ரஜினி என்னையே அவர் சார்பாக அனுப்பி வைத்திருக்கிறார். நானும் போய் ரஜினி சார்பாக பேசிவிட்டு வந்திருக்கிறேன். இந்த ‘கோச்சடையான்’ படத்தின் வெற்றி விழாவை ரஜினி தனது ரசிகர்களை அழைத்து ஒரு மாபெரும் ரசிகர் மன்ற மாநாடாக நடத்த வேண்டும் என்று அவரை கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

இவருக்குப் பின் பேச வந்த கவிப்பேர்ரசு வைரமுத்துவும் இந்தக் கோரிக்கையை முன்மொழிந்து ரஜினியிடம் இதே கோரிக்கையை வைத்தார். ரஜினியும் தன்னுடைய பேச்சின் துவக்கத்திலேயே இதைப் பற்றிக் குறிப்பிட்டு “இந்தப் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்களையெல்லாம் கூப்பிட்டு ஒரு மாநாடு மாதிரி நிச்சயமா நடத்துவேன்.. அதுல நிறைய பேசுவேன்..” என்று தனது ரசிகர்களை குளிர வைத்துள்ளார்..

இனி இந்தக் ‘கோச்சடையான்’ படத்தின் வெற்றிக்காக உழைத்து அதனை ஹிட்டாக்கி வெற்றி விழாவுக்காகக் காத்திருப்பதுதான் ரஜனி ரசிகர்களின் வேலை..

Our Score