கோச்சடையான் வசூல் எவ்வளவு..?

கோச்சடையான் வசூல் எவ்வளவு..?

ச்சும்மாவே, சுளுவான் குஞ்சுகள் நடித்த படத்திற்கே நம்மூர் தியேட்டர்களில் 100, 150 என்று விலை வைத்து கொள்ளை லாபம் அடிக்கின்றனர் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும்.. இதில் இந்தியாவுக்கே தலையான சூப்பர் ஸ்டாரின் 'கோச்சடையான்' வருகை தரும்போது எவ்வளவு வசூலாகும் என்று கணக்குப் போட்டு பார்த்தால் தலையே சுற்றுகிறது..!

'கோச்சடையான்' தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, போஜ்பூரி, பெங்காலி ஆகிய மொழிகளில் திரையிடப்படுகிறதாம். இதற்கப்பால் உலகமெங்கும் உள்ள தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் திரையிடப்படவுள்ளது. இப்படி கணக்குப் போட்டு பார்த்தால் சுமாராக 6000 ஸ்கிரீன்கள் இந்தப் படத்திற்குக் கிடைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஈரோஸ் நிறுவனம் சொல்கிறது..!

பல தமிழ்ப் படங்களை உலகளாவிய அளவில் விற்பனையும், விநியோகமும் செய்து வரும் ஈரோஸ் நிறுவனத்தின் இந்த எண்ணிக்கையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அப்படியே வைத்துக் கொண்டு கணக்குப் போட்டுப் பார்க்கலாம்..

ஏப்ரல் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை. அன்று முதல் தொடர்ச்சியாக சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 திங்கள்கிழமைவரையிலும் தமிழ்நாட்டில் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படும் என்று நினைக்கிறேன். மேலும் அடுத்தடுத்த நாட்களில் 4 காட்சிகள் என்று வைத்துக் கொண்டாலும் முதல் 7 நாட்கள் வசூலை மட்டுமே பார்ப்போம்.

இந்தியா தவிர மற்ற நாடுகளில் டிக்கெட் விற்பனை 'கோச்சடையானு'க்கு மட்டும் ஐநூறைத் தாண்டும் நிலையில் தமிழ்நாட்டில் மற்றும் பக்கத்து மாநிலங்களில் 100, 150 என்றும், வட இந்தியாவில் 250 ஆகவும் இருக்கலாம். அதனால் நாம் தோராயமாக 100 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். தியேட்டரின் கொள்ளளவு 300 என்று தோராயமாக வைத்துக் கொள்வோம். 

6000 தியேட்டர்கள் x 4 காட்சிகள் = 24000 காட்சிகள்

24000 காட்சிகள் x 7 நாட்கள் = 168000 காட்சிகள்

300 டிக்கெட்டுகள் x 100 ரூபாய் = 30000 ( 1 காட்சிக்கு)

30000 ரூபாய் x 168000 காட்சிகள் = 504,00,00,000 

மொத்தம் 504 கோடி ரூபாய் வருகிறது. இது ஒரு வாரக் கணக்கு மட்டுமே.. இந்த ஒரு வாரமும் அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல்லாக இருக்க வேண்டும்.. படத்தின் பட்ஜெட் இதுவரையில் வெளியான தகவல்களின்படி 200 கோடியைத் தாண்டிவிட்டது என்றுதான் சொல்கிறார்கள். கிராபிக்ஸ், அனிமேஷனை பெரிய, பெரிய நிறுவனங்களில் செய்வதால் அதுதான் செலவை இழுத்துவிட்டது.. சரி.. பரவாயில்லை.. 

இந்த ஒரு வாரத்திலேயே 504 கோடி ரூபாய் கிடைத்து... ஒருவேளை படம் சூப்பராக இருந்துவிட்டால் அடுத்தடுத்த வாரங்களில் இன்னமும் வசூல் தொகை கூடத்தான் செய்யும்.. அப்போது இதன் மொத்த வசூல் நினைத்தே பார்க்க முடியாதது..! எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் ரஜினி.. ரஜினி.. ரஜினி..!

வேறு எந்த நடிகருக்கும் இந்த 6000 ஸ்கிரீன்களை கொடுக்க விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் உண்மை..! அப்படியானால் ரஜினிக்கு மட்டும் இந்த தனிச் சலுகை ஏன்.. எப்படி..?  

அதுதான் சூப்பர் ஸ்டார்..!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *