தமிழ்ச் சினிமாவில் இருந்த, இருக்கின்ற பெண் இயக்குநர்கள் பட்டியலை கைவிரல்களை எண்ணியே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ஆணாதிக்கம் சார்ந்த தொழிலாக இருந்தாலும், கலை மற்றும் படைப்புத் திறனை மையமாக வைத்து பெரிய அளவுக்கு பெண் இயக்குநர்கள் இங்கே புகழ் பெறவில்லை..
சமீப காலமாக சினிமாவுலகில் நுழைந்த பெண் இயக்குநர்கள்கூட ஒரு படத்தினை இயக்கிவிட்டு அடுத்த படத்திற்காக நீண்ட வருடங்களாக காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த நிலையில் சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து ஒரு இளம் பெண், கோடம்பாக்கத்தில் இயக்குநராக கால் பதித்திருக்கிறார்.
பெயர் சிவாணி. படித்தது பொறியியல். இதில் கோல்டு மெடலிஸ்ட்டாம்.. ஆனால் ஆர்வம் சினமா பற்றியது.. அவரது தாத்தா ஜீவரத்தினம், ஜெமினி கணேசனை வைத்தெல்லாம் சினிமா எடுத்த தயாரிப்பாளராம். தாத்தாவின் ரத்தம் பேத்திக்கு ஒட்டிக் கொள்ள.. சினிமா கனவு இவருக்குள் நினைவாகியிருக்கிறது.. இதற்குத் தோதாக இவரது அம்மாவே தயாரிப்பாளராகவும் கிடைத்துவிட.. ரெடி ஸ்டார்ட், ஆக்சன் என்று சொல்லித் இயக்கப் பணியைத் துவக்கிவிட்டார்..
‘சோன்பப்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார். காமெடி கலந்த திரில்லர் கதையாம்.. நான்ஸ்டாப்பாக பேசுகிறார் இந்த இயக்குநர். “முதல் படம்ன்றதால எனக்கு டென்ஷனெல்லாம் இல்லை.. ஆக்டர்ஸ்கிட்ட டயலாக் சொல்லிக் கொடுக்கும்போதும், சீன் பத்தி சொல்லும்போதும்கூட எனக்கத் தயக்கமெல்லாம் இருந்ததேயில்லை..” என்கிறார் இந்தத் தைரியசாலி..
‘வழக்கு எண் 18/9’ படத்தில் நடித்த ஸ்ரீ ஹீரோவா நடிக்கிறார். ‘குமரன் சில்க்ஸ்’ விளம்பரப் படத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா ஹீரோயின். மேலும் மனோபாலா, கராத்தே ராஜா, சோனியா மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. ‘வெண்ணிலா வீடு’ படத்தின் இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் இசையமைச்சிருக்காரு.. ‘தசாவதாரம்’ படத்தின் எடிட்டர் தணிகாசலம்தான் இந்தப் படத்துக்கும் எடிட்டிங்..
“தாத்தா போன்று ஊக்கம் கொடுக்க ஆட்களும், அப்பா போன்று மணிபர்ஸை கொடுக்க தயாரிப்பாளரும், அம்மா போன்று கதாசிரியரும் உடனே கிடைத்துவிட்டதால் சுலபமாக படத்தை இயக்கிவிட்டீர்களா..? என்று கேட்டால்.. “அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. நான் நினைச்சிருந்தா பொறியியல் துறையிலேயே போயிருக்கலாம். ஆனா இந்த பீல்டு, லேடீஸுக்கு எவ்ளோ கஷ்டம்ன்னு அனுபவிச்சாத்தான் தெரியும்… இப்படியெல்லாம் இருக்கும்னு நினைச்சுத்தான் நான் உள்ள வந்திருக்கேன்.. எனக்கு பயமே இல்லை.. எப்படியம் ஜெயிச்சிருவேன். தொடர்ந்து வேற தயாரிப்பாளர்களின் படங்களையும் இயக்குவேன்…” என்கிறார் உறுதியாக..!
40 நாட்களில் படத்தை முடித்திருக்கும் சிவாணி, அடுத்து நம்பிக்கையோடு சொல்வது தியேட்டர்களுக்கு கொண்டு செல்லும் அடுத்தக் கட்டப் பணியையும் தன்னால் செய்ய முடியுமென்று..!
வா தாயி.. காத்திருக்கிறது பேனாக்களின் மை.. ஸ்கிரீனில் அசர வைத்தால், புள்ளி வைத்து கோலமும் போட்டுவிடுவார்கள் நம்ம பத்திரிகையாளர்கள்..!