பேப்பர் மீனா சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முத்து பாரதி பிரியன் தயாரித்துள்ள படம் ‘ஆராய்ச்சி’.
இந்தப் படத்தில் முத்து பாரதி பிரியன், அனுகிருஷ்ணா உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் வெடிமுத்து.
இந்தப் படம் குறித்து வெடிமுத்து பேசும்போது, “இன்றைய இளைய சமுதாயம் சீர்கெட்டுப் போய்க் கொண்டிருப்பதை இந்த சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறதே என்று வேதனையாக இருக்கிறது. நாடென்ன செய்தது நமக்கு? என்று கேள்வி கேளாமல், நீ என்ன செய்தாய் அதற்கு? என்ற ஒற்றை பதிலின் வடிவமாய் மாணவர்கள் சமுதாயத்திற்காக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்…” என்றார்.
இந்த ‘ஆராய்ச்சி’ திரைப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமாநாராயணன் வெளியிட, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.