full screen background image

“என் கேரக்டருக்கு பெயரே கிடையாது..” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி கீர்த்தி சுரேஷ் பேட்டி 

“என் கேரக்டருக்கு பெயரே கிடையாது..” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி கீர்த்தி சுரேஷ் பேட்டி 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான K.E.ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் உருவாகியருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

‘பைரவா’ படத்திற்கு பின்பு இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்தப் படம் இதுதான். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் தனது கேரக்டர் பற்றிப் பேசிய கீர்த்தி சுரேஷ், “இந்தப் படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. ஹுமர் கலந்த சஸ்பென்ஸ் வேடம்.

பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப் பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும்போது நான் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம் பேச மாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும்போது எனக்கு சொல்லிக் கொடுத்து உதவுவார்.

செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் Teddy Bear-ஐ போல கியூட்டான மனிதர். அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன் எள் அம்மாவின் தோழி. எனக்கு அவங்களை சின்ன வயதிலிருந்தே தெரியும். ‘பாகுபலி’ வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும்போதே எனக்கு கதையும் என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.  விக்னேஷ் சிவன் ஸார் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துதான் வசனத்தை கூறுவார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும்போது அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

அனிருத்தின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. மூன்று பாடல்கள் சிங்கிளாக வெளிவந்து மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது சந்தோஷமாகவுள்ளது…” என்றார் கீர்த்தி சுரேஷ்.

Our Score