full screen background image

விஷால்-வடிவேலு நடிப்பில் உருவாகும் ‘கத்தி சண்டை’

விஷால்-வடிவேலு நடிப்பில் உருவாகும் ‘கத்தி சண்டை’

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப் பிரமாண்டமான படமாக ‘கத்தி சண்டை’ படத்தையும்  தயாரிக்கிறார். அதிரடிக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் ‘கத்தி சண்டை’ படத்தை இயக்குநர் சுராஜ் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் மிக முக்கியமான நகைச்சுவை  வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். வடிவேலு தனி கதாநாயகனாக நடிக்கத் துவங்கிய பின்பு வேறொரு ஹீரோவுடன் இணைந்து நடித்ததே இல்லை. மற்றவர்களின் படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தவர், இப்போது மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில்தான் ஹீரோவுக்கு துணையாக காமெடியன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள். விஷால், வடிவேலு இருவரும் ஏற்கனவே ‘திமிரு’ படத்தில் இணைந்து நடித்து அந்தப் படம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் ‘தலைநகரம்’, ‘மருதமலை’ இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அதிஷ்டம் யாருக்கு என்று தெரியவில்லை. மற்ற நட்சத்திரங்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும். ‘கத்தி சண்டை’ படத்தின் படிப்பிடிப்பு இம்மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Our Score