full screen background image

‘கத்தி சண்டை’ படத்திற்காக ஜார்ஜியாவில் விஷால் – தமன்னா பாடல் காட்சி

‘கத்தி சண்டை’ படத்திற்காக ஜார்ஜியாவில் விஷால் – தமன்னா பாடல் காட்சி

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரித்து வரும் படம் ‘கத்தி சண்டை’.

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  – ரிச்சர்ட் எம்.நாதன், இசை – ஹிப் ஹாப் தமிழா, பாடல்கள் – நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா, படத் தொகுப்பு – ஆர்.செல்வா, சண்டை பயிற்சி – கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்சன் கணேஷ், கலை – உமேஷ்குமார், நடனம் – தினேஷ், ஷோபி, தயாரிப்பு மேற்பார்வை – பிரேம் ஆனந்த், தயாரிப்பு – எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் – சுராஜ்.

படம் பற்றி இயக்குநர் சுராஜ் பேசும்போது, “இந்த படத்திற்காக விஷால் –  தமன்னா இருவரும் பங்குபெற்ற  ‘குட்டி குட்டி நெஞ்சிலே  காதல் வந்ததும் நெஞ்சில் லட்சம் பூக்கள் பூக்குதே’   என்ற பாடல் காட்சி நடன இயக்குநர் ராதிகாவின் நடன அமைப்பில் ஜார்ஜியா நாட்டில் படமாக்கப்பட்டது.   

அத்துடன் விஷால் மட்டும் பங்கு பெற்ற,  ‘எவன் நெனச்சாலும் என்ன புடிக்க முடியாது’ என்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. இந்த பாடல்கள் அனைத்தும் நிச்சயமாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. காமெடிக்கும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்த கத்தி சண்டை வருகிற தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது…” என்றார்.  

Our Score