PSR Film Factory நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.S.R.பிரதீப் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கருப்பு கண்ணாடி’.
இந்தக் ‘கருப்பு கண்ணாடி’ திரைப்படத்தில் நடிகர் தணிகை, சுப்ரமணிய சிவா, துர்கா, ஜிஜினா, ராஜா சிம்ஹா, காகராஜ், பாடகர் வேல்முருகன், மாப்பு ஆண்ட்ரூஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக சம்சாத், இசையமைப்பாளராக சித்தார்த்தா பிரதீப் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான நியூட்டன்.ஜி இயக்குகிறார்.
இந்தக் ‘கருப்பு கண்ணாடி’ படத்தின் படப்பிடிப்பு, இன்று சென்னையில் சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில் இனிதே துவங்கியது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் சுப்ரமணிய சிவா கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.









