2019-ம் ஆண்டு வெளியாகி பல எண்ணற்ற ரசிகர்களின் பாராட்டுக்களை வென்ற படம் ‘வி1’.
இப்படத்தின் நாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்திருந்தார். புதுமுகமாக இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார் ராம் அருண் காஸ்ட்ரோ.
தற்போது இவர் கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.
ஐடா பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தங்க மீனா பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜேஷ் பாலச்சந்திரன் இயக்குகிறார்.
இவர் ‘இந்தியன்-2’, ‘பூமிகா’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனிடம் பணியாற்றிய நித்யானந்தம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ‘பரியேறும் பெருமாள்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராமு தங்கராஜ் இப்படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். காஸ்ட்யூம் டிசைனர் – ஒஷின் அனில், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)
சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள் – தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.