full screen background image

மனைவியின் கொலைக்கு காரணம் தேடும் கணவனின் கதைதான் ‘கருப்பட்டி’ திரைப்படம்

மனைவியின் கொலைக்கு காரணம் தேடும் கணவனின் கதைதான் ‘கருப்பட்டி’ திரைப்படம்

மோனிதா மூவீஸ் தயாரிப்பில், நடிகர் விஜயராஜ் கதாநாயகனாக நடித்துவரும் புதிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘கருப்பட்டி’.

மர்மம், திகில் மற்றும் உணர்வுப்பூர்வமான காதலை இணைத்து உருவாகி வரும் இந்தப் படம், வித்தியாசமான கதைக் களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கொளத்தூர் என்ற கிராமத்தை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், ‘கருப்பட்டி’ என்ற இளைஞராக விஜயராஜ் நடித்துள்ளார்.

தனது தாயுடன் வாழும் கருப்பட்டி, அதே கிராமத்தில் வசிக்கும் பவானி மீது காதல் கொண்டு, பின்னர் அவளை திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனால் திருமண வாழ்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே பவானி மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.

அதன் பின், பவானியின் ஆவி கிராம மக்களை அச்சுறுத்தத் தொடங்குகிறது.

தனது மனைவியின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையை கண்டறிய கருப்பட்டி மேற்கொள்ளும் தேடல், பல அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கும் எதிர்பாராத திருப்பங்களுக்கும் வழிவகுக்கிறது.

பவானியின் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன? அதற்குக் காரணமானவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கான பதில்களை திகில் கலந்த திரைக்கதையில் இந்தப் படம் சொல்லவுள்ளது.

இந்தப் படத்தில் விஜயராஜுடன் சமந்து, ஹரிணி.தா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ரமேஷ், கலைவாணி, ரஷீத் சத்யராஜ், செண்பகவள்ளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை செந்தில் மாறன் மற்றும் கவிநாதன் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

டி.எஸ். திவாகர் இசையமைப்பதுடன் படத் தொகுப்பையும் கவனித்துள்ளார். பாடல்களை ஹிஜாஸ் அகமது எழுதியிருக்கிறார். நடன அமைப்பை ராம் முருகேஷ், சண்டைக் காட்சிகளை ரமேஷ் வடிவமைத்துள்ளனர்.

‘கருப்பட்டி’ கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விஜயராஜ், தனது மோனிதா மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘காதல் பதிவு’, ‘நந்திவரம்’, ‘சினிமா கனவுகள்’, ‘கொலை தூரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தனது ஐந்தாவது திரைப்படமாக இயக்கி வருகிறார்.

சேலம், மேட்டூர், செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

மர்மம், திகில், ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகளை இணைத்து உருவாகி வரும் ‘கருப்பட்டி’, வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக உருவாகி வருகிறது.

Our Score