full screen background image

சின்னத்திரை நாயகி நீலிமா இசை நடித்திருக்கும் ‘கருப்பங்காட்டு வலசு’

சின்னத்திரை நாயகி நீலிமா இசை நடித்திருக்கும் ‘கருப்பங்காட்டு வலசு’

CREW 21 ENTERTAINMENT நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘கருப்பங்காட்டு வலசு’.

சின்னத்திரை உலகத்தில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை நீலிமா இசை, இந்தப் படத்தில் தனித்துவம் வாய்ந்த நாயகியாக நடித்திருக்கிறார்.

எபிநேசர் தேவராஜ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், ஆரியா, மாரி செல்லத்துரை, ஜார்ஜ் விஜய் நெல்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஆதித்யா-சூர்யா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷ்ரவன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து நடிகை நீலிமா இசை பேசும்போது, “இது, குற்றப் பின்னணி உள்ள திகிலான கதையம்சம் கொண்ட படம்.

வெளிநாட்டில் வசிக்கும் நான் எனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு திரும்பவும் என் ஊருக்கே திரும்புவேன். பழமையில் ஊறிப் போயிருக்கும் எனது கிராமத்தை அல்ட்ரா மாடர்னாக, ஸ்மார்ட் வில்லேஜாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவேன். இதுதான் எனது கேரக்டர் ஸ்கெட்ச்.

பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட என் கிராமத்து மக்கள் என்னுடைய அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா… இல்லையா… என்பதுதான் படத்தின் கதை…” என்றார்.

Our Score