வர வர இயக்குநர் இமயம் இளையவர்களை வாழ்த்துகிறேன் என்று சொல்லி இளையவர்கள் போலவே பேசிக் கொண்டிருக்கிறார்.

‘பீட்சா’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படமான ‘ஜிகர்தண்டா’ படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர் இயக்குநரை அளவுக்கு மீறியும் புகழ்ந்து தள்ளிவிட்டார்..
“இந்தப் பையன் ‘பீட்சா’ன்னு ஒரு படம் எடுத்தான். பென்டாஸ்டிக் மூவி. டைட்டில்தான் படமே.. ரொம்பச் சின்ன கதை.. ஆனா சுவாரஸ்யமா எடுத்திருந்தான்.. மிரட்டியிருந்தான்.. பெரிய பட்ஜெட் படங்கள்ல.. நிறைய பணத்தைக் கொட்டி.. படம் எடுத்து ரிலீஸ் செய்றதைவிட.. இது மாதிரி ஸ்மால் பட்ஜெட்ல.. இந்தப் படத்துக்கு அவனோட மூளைதான் முதலீடு.. மூளையை நம்பியே படம் எடுத்திருக்கான்.. ஹாட்ஸ் ஆஃப்.. இவனோட உடம்பு மாதிரியே மூளையும் ரொம்ப பெரிசு போலிருக்கு. டைரக்சன் வேலை சுலபமில்லீங்க.. இவ்ளோ பெரிய உடம்பை வைச்சுக்கிட்டு ஓடியாடி வேலை பார்த்து.. படுத்து, எந்திரிச்சு ஆக்சன் சொல்லிக் கொடுத்து.. எவ்ளோ பெரிய வேலை.. கஷ்டப்பட்டு செஞ்சிருக்கான்.. அதுக்காகவே இவனை தனியா பாராட்டணும். பீட்சா கதைதான் நாயகன். அது ஹீரோக்கள் படமில்லை. முன்னாடி நான் இருந்த காலத்துல எல்லாம் எல்லாமே ஹீரோக்கள் கைலதான். ஆனா இப்ப அது மாதிரியில்லை.. இப்போ இயக்குநர்கள் கைக்கு வந்திருக்கு. பீட்சா இயக்குநரோட படம். அப்படி ஜெயிச்சிருக்கான் கார்த்திக்… ” என்றார்.









