ஹம்சஹர்ஷா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக B. ஜெயந்தி மற்றும் A.N.திருமுருகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘நின்று கொல்வான்’.
இந்தப் படம் கன்னடம், தமிழ் என்று இரு மொழிகளிலுமே ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.
அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் மிக பிரமாண்டமான செலவில் எடுக்கப்படும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகரான சேட்டன் சந்த்ரா கதாநாயகனாக நடிக்கிறார். தற்போதைய இந்திய மாடல் உலகில் முன்னனி அழகியாக திகழும் கருணா டோக்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் ஆசிஷ் வித்யார்த்தி, யோகி பாபு, ராஜுவ் பிள்ளை, ‘நிழல்கள்’ ரவி, கீதா, ‘மாஸ்டர்’ அபிஷேக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – G. பாலமுருகன், இசை – ஜீடா சாண்டி, படத்தொகுப்பு – N.M. விஷ்வா, பாடல்கள் – ‘கவிப்பேரரசு’ வைரமுத்து, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – B. ஜெயந்தி, A.N. திருமுருகன், எழுத்து இயக்கம் – VP ஷங்கர்.
படம் பற்றி பேசிய இயக்குநர் வி.பி.ஷங்கர், “பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சென்னையில் ஒரு கல்லூரியில் தங்கி படிக்கின்றான். உடன் பயிலும் நாயகி மீது காதல் வயப்படுகிறான். இருவரும் காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கையில் ஒரு விஷயம் நடந்து அதனால் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். அது என்ன என்பதும்..? அதன் பின்னான கதை என்பதுதான் இந்தப் படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை. சென்னை, கோவா, உடுப்பி, மைசூர், பெங்களுர் பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது..” என்றார்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இவரையும் நிச்சயம் வாழ வைக்கும்..!