full screen background image

‘லிவிங் டூ கெதர்’ பற்றிய திரைப்படம் ‘கண்டேன் காதல் கொண்டேன் திரைப்படம்’

‘லிவிங் டூ கெதர்’ பற்றிய திரைப்படம் ‘கண்டேன் காதல் கொண்டேன் திரைப்படம்’

கிரியேட்டிவ் டீம்ஸ் ப்ரெசென்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் E.R. ஆனந்தன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கண்டேன் காதல் கொண்டேன்’.

இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் வெங்கட்G.சாமி. இத்திரைப்படத்தில் சன் மியூசிக் புகழ் பாலா  கதாநாயகனாகவும், அஷ்வினி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் மயில்சாமி, ‘பத்ரகாளி’ ராஜசேகர், ‘சூது கவ்வும்’ ராதா, கே.எஸ்.பழனி, கிங்ஸ் A.மோகன், கிச்சா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுரேஷ் தேவன், இசை – நாகா, எடிட்டிங் – சுரேஷ்  அர்ஸ், ஆர்ட் – ஷிவா யாதவ், பாடல்கள் – மோகனராஜன், சாரதி, வெங்கட்.G. சாமி, நடனம் – தீனா, பாப்பி, தயாரிப்பு நிர்வாகம் – சாம் V.ஞானராஜ், DI – PRISM AND PIXL, தயாரிப்பு நிறுவனம் – கிரியேட்டிவ் டீம்ஸ், தயாரிப்பாளர் – E R ஆனந்தன், இயக்குநர் – வெங்கட் G.சாமி. 

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் வெங்கட் ஜி.சாமி பேசுகையில், “கதைப்படி நாயகன், நாயகி இருவரும் பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றனர். இருவரும் சிறிது காலம் தனியாக சேர்ந்து வாழலாம். இத்தைகைய வாழ்க்கை பிடித்தால் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

இதற்காக  ஊரை விட்டு வெளியேறி தனியாக நவீன கால முறைப்படி வாழ்கின்றனர். ஆனால் பின்னர்தான் தெரிய வருகிறது இவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலை கொண்டவர்கள் என்று.

அதே நேரம் இவர்களின் காதலால் இவர்களின் குடும்பங்களிலும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் பல்வேறு பிரச்சனைகள்  ஏற்பட்டு வீடு திரும்புகின்றனர், வீட்டிலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்களா..? பின்னர் அவர்களின் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்லியிருக்கிறோம்.. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது…” என்றார்.

 

Our Score