full screen background image

நாளை கமல்ஹாசன் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்..!

நாளை கமல்ஹாசன் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்..!

அகில  இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நற்பணி இயக்கத் தலைவர் பத்மபூஷண், உலக நாயகன், நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம், இலக்கிய விழா ஆகியவை நாளை நவம்பர் 7, சனிக்கிழமையன்று  நடைபெற உள்ளது.

காலை 8 மணிக்கு கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள பால விஹார் மன நலம் குன்றிய காப்பகத்தினர்களுக்கு காலை உணவும் மற்றும் இலவச மருந்து பொருட்களும் வழங்கப்படுகிறது.

காலை 9 மணிக்கு அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மற்றும் செட்டி நாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையும் இணைந்து இருதய அறுவை சிகிச்சைக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள காவல் சிறார் மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

மதியம் 3 மணிக்கு பத்மபூஷன், உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் மற்றும் 37-வது நற்பணி இயக்க ஆண்டு விழா சென்னை அண்ணா கலையரங்கில் (சுவாமி சிவானந்தா சாலை, தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் எதிரில்) நடைபெறுகிறது.

விழாவிற்கு கவிஞர் புவியரசு தலைமை வகிக்கிறார். நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் எழுத்தாளர் சுகா ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

இறுதியில், 2014-2015-க்கான அன்னை இராஜலட்சுமி நினைவு இலக்கிய விருது மற்றும் தியாகி சீனிவாசன் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பரமக்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கட்டிட நிதியுதவி, சிறந்த மாவட்டங்களுக்கான சிறப்பு விருதுகள் ஆகியவைகளை வழங்கி நற்பணி இயக்க தலைவர் கமல்ஹாசன் அவர்கள் விழா சிறப்புரை நிகழ்த்துகிறார்.

Our Score