full screen background image

“எனக்காகத் தன் நடிப்பைக் கைவிட்டவர் என் அண்ணன்” – சந்திரஹாசன் பற்றி கமல்ஹாசன்

“எனக்காகத் தன் நடிப்பைக் கைவிட்டவர் என் அண்ணன்” – சந்திரஹாசன் பற்றி கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் உடன் பிறந்த அண்ணனும், நடிகருமான சந்திரஹாசன் கடைசியாக நடித்த அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க’ படம் நாளை, அக்டோபர் 8-ம் தேதி நேரடியாக சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

GB Studio நிறுவனத்திற்காக தயாரிப்பாளர் பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி, Leo Vision நிறுவனத்தின் தயாரிப்பாளர் V.S.ராஜ்குமார் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கமல்ஹாசனின் சகோதரரான சந்திரஹாசன் கதாநாயகனாகவும், நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும், டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை என்.ஸ்டிபன் ரங்கராஜ் இயக்கியுள்ளார்.

காதலிக்க வயது ஒரு தடை இல்லை. உடலிற்குத்தான் வயதாகும். மனசு எப்போதும் இளமையுடனே இருக்கும் என்பதை அழகாக எடுத்துரைக்கும் படம்தான் இந்த அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க’.

ஒரு முதியோர் இல்லம்.. முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி.. அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள்.. காதலை காப்பாற்ற கை கொடுக்கும் நண்பர்கள்.. இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை நகைச்சுவையுடன் சொல்லும்விதமாக இப்படம் உருவாகி உள்ளது.

காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில் சந்திரஹாசன் திடீரென்று லண்டனில் மாரடைப்பால் காலமானார். தற்போது இப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து படம் வெளியிட்டுக்கு தயாராக உள்ளது.

நாளை இந்தப் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தப் படத்தின் வெளியீடு குறித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன் திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன். அவர் நடித்த கடைசி படம் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க‘ அக்டோபர் 8ம் தேதி @SonyLIV -ல் வெளியாகிறது. என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன். ‘ஐயா.. அப்பா.. உங்கள் படம் 8-ம் தேதி ரிலீஸ்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Our Score