ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.தில்லி பாபு தயாரிப்பில் கமர்ஷியல் வெற்றிப் பெறக் கூடிய எதிர்ப்பார்ப்பில் உள்ள புதிய திரைப்படம் ‘கள்வன்.’
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இந்தப் படத்தில்தான் நடித்துள்ளனர்.
மேலும் தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – G.தில்லி பாபு, தயாரிப்பு நிறுவனம்: ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – P.V.சங்கர், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், படத் தொகுப்பு – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, டீசர் கட் – எடிட்டர் சேன் லோகேஷ், கலை இயக்கம் – N.K.ராகுல், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், கதை, திரைக்கதை – ரமேஷ் அய்யப்பன் & P.V.சங்கர், வசனம் – ரமேஷ் அய்யப்பன், P.V.சங்கர் & ஜேஷ் கண்ணா, கூடுதல் திரைக்கதை – S.J.அர்ஜூன் & சிவக்குமார் முருகேசன், நிர்வாகத் தயாரிப்பு – பூர்ணேஷ், தயாரிப்பு நிர்வாகி – S.S.ஸ்ரீதர், கிரியேட்டிவ் புரொட்யூசர் – K.V. துரை, பாடல்கள் – சிநேகன், ஏகாதேசி, மாயா மகாலிங்கம், நவக்கரை நவீன் பிரபஞ்சம், மேலாளர்- அறந்தை பாலா, மணி தாமோதரன், ஆடை வடிவமைப்பு – கிருஷ்ண பிரபு, புகைப்படங்கள்- E. ராஜேந்திரன், உடைகள் – சுபியர், ஒப்பனை – வினோத் சுகுமாறன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D’One, மார்க்கெட்டிங் & புரோமோஷன்ஸ் – DEC, ஒலி வடிவமைப்பு – Sync Cinemas, DI – Lixo Pixels, VFX மேற்பார்வை – கிரண் ராகவன் (Resol VFX), விளம்பர வடிவமைப்பாளர்- வின்சி ராஜ்.
காமெடி அட்வென்சர் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பல த்ரில்லர் தருணங்கள் உள்ளன.
படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி ஆகியவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.