’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..!

’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..!

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி-2’ படத்தில் அரசியல்வாதியான வில்லன் கேரக்டரில் ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற துரை சுதாகர் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் சில சிறு முதலீட்டு படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர், பிறகு சினிமாவில் ஒரு நடிகராக நிலைத்து நிற்க வேண்டும் என்பதால் கதை தேர்வில் கவனம் செலுத்தி, சிறு வேடமாக இருந்தாலும், பெயர் சொல்லும் வேடமாக இருப்பதோடு, அவைகள் முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணி காத்திருந்திருக்கிறார்.

durai sudhakar-actor-1

அதன்படி, இயக்குநர் சற்குணம் கண்ணில்பட்டவருக்கு ‘களவாணி-2’ படத்தில் மெயின் வில்லன் வேடம் கிடைத்தது. அதுவும் அரசியல்வாதி வேடம். கிடைத்த வேடத்தை சரியாக பயன்படுத்தி, இயக்குநர் சற்குணத்திடம் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடமாகட்டும், சிறியதோ, பெறியதோ எந்த வேடமாக இருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் துரை சுதாகர்.

திடீரென்று தோன்றி திடீரென்று மறையும் நட்சத்திரமாக இல்லாமல், மக்கள் மத்தியில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்களின் நட்சத்திரமாக இருப்பதற்காகவே சினிமாவில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறாராம்.

இந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராவதோடு, பிரகாஷ்ராஜ், ரகுவரன் போன்றவர்களின் வரிசையில் அதிரடி வில்லனாகவும் வருவேன் என்று அபார நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் நடிகர் துரை சுதாகர்.

Our Score