full screen background image

அப்புக்குட்டி நடிக்கும் ‘கலன்’ திரைப்படம்!

அப்புக்குட்டி நடிக்கும் ‘கலன்’ திரைப்படம்!

ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரிக்கும் ‘கலன்’ திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தீபா, அப்புக்குட்டி, சம்பத்ராம், சேரன்ராஜ், குருமூர்த்தி, மணிமாறன், ராஜேஷ், யாசர், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கிடுகு படத்தின் இயக்குநரான வீரமுருகன் இயக்கியுள்ளார். இசை – ஜெர்சன், படத் தொகுப்பு – விக்னேஷ் வர்ணம் விநாயகம், ஒளிப்பதிவு – ஜெயக்குமார் மற்றும் ஜே.கே., பாடலாசிரியர் – குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன், கலை இயக்கம் – திலகராஜன், அம்பேத், நடனம் – வெரைட்டி பாலா, சவுண்ட் எஞ்சினியர் – சந்தோஷ்.

Our Score