திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி சற்று நேரத்திற்கு முன்பு சென்னையில் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு வயது 94.
கடந்த சில தினங்களாக மிக கவலைக்கிடமான நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர். இன்று (07) மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 27-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீர் சுகவீனமுற்ற கலைஞர் கருணாநிதி, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் அவரின் உடல் நிலை முன்னேற்றமடைந்துள்ளதாக, மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. இன்று மாலை 6.10 மணியளவில் அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் இறுதிச் சடங்குகள் நாளை சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!










