தன்னுடைய படம் போலவே விளம்பரங்களையும் வித்தியாசமாகவே வடிவமைக்கும் வழக்கம் உள்ளவர் இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் இயக்கிய அனைத்து படங்களின் புரமோஷன்களும், டீஸர்களும், டிரெயிலர்களுமே இதற்கு சாட்சி.
தற்போது அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் கடவுள் இருக்கான் குமாரு படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி, ஆனந்தி இருவரும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
அப்போது இந்தப் படத்தின் 4 டீஸர்கள் வெளியிடப்பட்டன. இந்த நான்கையும் சேர்த்து பார்த்தால்கூட ‘இந்தப் படத்தின் கதை இதுதான்.. திரைக்கதையின் போக்கு இதுதான்’ என்பதை சொல்லவே முடியவில்லை. அந்த அளவுக்கு நான்கு டீஸர்களுமே நான்குவிதமாக இருந்தன.
கூடவே 2-வது டீஸர் நேரடியாகவே ஒரு சர்ச்சையைத் துவக்கி வைப்பதாக இருந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் வெற்றிகரமான டாக் ஷோ-வான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை அப்படியே உல்டா செய்து ‘பேசுவதெல்லாம் உண்மை’ என்கிற தலைப்பில் டாக் ஷோ நடப்பதாகவும் அதனை நடிகை ஊர்வசி தொகுத்து வழங்குவதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு ஜி.வி.பிரகாஷும், ஆனந்தியும் தங்களது காதல் பிரச்சினையை கொண்டு வந்து தகராறு செய்வதாகவும் கதை அமைத்திருக்கிறார்.
படத்தில் இது இருக்கிறதா அல்லது வெறும் படத்தின் பிரமோஷனுக்காக இதை அமைத்திருக்கிறாரா என்பது படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.
‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் பேச்சாளரான இயக்குநர், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சாதாரணமாக ஒரு முறை சொன்ன ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்கிற டயலாக்கையே தமிழ்ச் சினிமாவில் கொத்து புரோட்டோ போட்டு படுத்தியெடுத்திவிட்டார்கள்.
அதற்கே கடுமையாக தனது எதிர்ப்பை காட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்’ இதற்கு என்ன சொல்வாரோ..?
Watch the teaser of new upcoming Tamil action comedy film titled Kadavul Irukaan Kumaru, directed by M. Rajesh and produced by T. Siva.
Cast: GV Prakash Kumar, Anandhi, Nikki Galrani, RJ Balaji
Written & Directed by : M. Rajesh
Music: GV Prakash Kumar
Producer: T. Siva
Banner: Amma Creations