full screen background image

காதல் என்பது எதுவரை..? – விடை சொல்ல வருகிறது ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ திரைப்படம்    

காதல் என்பது எதுவரை..? – விடை சொல்ல வருகிறது ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ திரைப்படம்    

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புகழ் பெற்ற வியாபார நிறுவனமான சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரித்துள்ள முதல் தமிழ்ப் படம் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி.’

இந்தப் படத்தில் பரத் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பஞ்சாப் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும், பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனாராய் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.  மற்றும் ரவிமரியா, கு.ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குநர் காசி, மூனார் டேவிட், மதுரை வினோத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – முஜிர் மாலிக், இசை    –  அன்பு ராஜேஷ், பாடல்கள்   –   கலைக்குமார், அண்ணாமலை, ஏக்நாத், இரா.ரவிஷங்கர், எடிட்டிங்   –  என்.ஹெச் பாபு, சண்டை பயிற்சி  –  ட்ராகன் பிரகாஷ், நடனம்   –  ரமணா, திலீப், நிர்வாகத் தயாரிப்பு    –  கிரண் தனமலா, தயாரிப்பு மேற்பார்வை   –   நயீம், தயாரிப்பு   –  சுதிர் புதோடா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  ரவி பார்கவன்.

இவர் ஏற்கெனவே தமிழில் ‘வெல்டன்’, ‘ஒரு காதல் செய்வீர்’, ‘ திரு ரங்கா’ ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் ரவி பார்கவன் பேசும்போது, “இன்றைய ஸ்மார்ட் போன்களின் மாடர்ன் உலகில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி தனது தனித்துவத்தை இழந்ததில் காதலும் ஒன்று.

உண்மையில் காதலின் அர்த்தம் என்ன..? காதல் என்பது எதுவரை…? இன்றைய இளைய தலைமுறைக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறதா…? என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்தப் படம்.

காதலை மையமாக கொண்டு அதேசமயம், கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாகவும் இன்றைக்குள்ள காதலர்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த  ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. 

இதன் படப்பிடிப்பு  சென்னை, கோவை, அமலபுரம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது..” என்றார்.

Our Score