full screen background image

காவியத்தலைவன் – சில சாதனைகள்

காவியத்தலைவன் – சில சாதனைகள்

வசந்தபாலனின் ‘வெயில்’ திரைப்படம் மூன்று ஃபிலிம்பேர் விருதுகளையும், சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் பெற்ற படம்.

‘வெயில்’ திரைப்படம் இந்தியன் பனோராமாவிற்கு தேர்வு செய்யப்பட்டதோடு, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது.

‘வெயில்’ திரைப்படம் உலக அளவிலான பல்வேறு திரைப்பட விழாக்களில், சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டது.

உலக அளவிலான பல்வேறு குழந்தை நல அமைப்புகள் குழந்தைகளை எப்படி நடத்தக்கூடாது என்ற கருத்தை ‘வெயில்’ திரைப்படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது என்று சொல்லி தங்களின் பிரச்சாரப் படமாக ‘வெயில்’ படத்திற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது.

‘வெயில்’ திரைப்படம் எஸ்.ஆர்.எம். திரைப்படக் கல்லூரியில் ஒரு திரைப்பட பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடி தெரு’ திரைப்படம், மூன்று ஃபிலிம் பேர் விருதுகளைப் பெற்றதோடு இந்தியன் பனோரமாவிற்கும் தேர்வு செய்யப்பட்டது.

‘அங்காடி தெரு’ திரைப்படம் பாண்டிச்சேரியில் சிறந்த திரைப்படத்திற்கான அரசு விருது பெற்றது.

‘அங்காடி தெரு’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான இந்தியத் திரைப்படமாக கடைசிவரையிலும் தேர்வில் இருந்த படம்.

இப்போது இயக்குநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் காவியத் தலைவன்.

kaaviyathalaivan-1

சித்தார்த், பிருத்விராஜ் சுகுமாரன், நாசர், வேதிகா, தம்பி ராமையா, சிங்கம்புலி, மன்சூர் அலிகான், பொன்வண்னன் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார்.

kaaviyathalaivan-3

நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு இளம் தலைமுறை இயக்குநருடன், இசைப்புயல் இணைந்திருக்கும் படம் இது.

இந்தப் படம் முழுக்க நாடகம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் ஒப்பனையும் இப்படத்தில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த ஒப்பனைக் கலைஞரான ‘பட்டணம்’ ரசீத் அவர்கள் இப்படத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி புரிந்துள்ளார்.

kaaviyathalaivan-4

இப்படத்தின் கதை உருவாக்கத்திற்காக மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் என முக்கியமான நாடக சங்கங்களில் உள்ள மூத்தக் கலைஞர்களிடம் கலந்தாலோசித்து, ஒரு வருடத்திற்கும் மேலாக கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

kaaviyathalaivan-5

சித்தார்த்தும், பிருத்விராஜ் சுகுமாரனும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது.

CS 24_27

‘பரதேசி’யில் தன் நடிப்பின் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த வேதிகாவிற்கு, இந்தப் படம் இன்னுமொரு அடையாளம்.

CS 28_23

தமிழ், தெலுங்கு, இந்தி என பரபரப்பாக இயங்கும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ‘மதராஸப்பட்டிணம்’ படத்திற்குப் பின் ஒளிப்பதிவு செய்யும் இரண்டாவது பீரியட் படம்.

CS 43_02

பிரபல இயக்குநர் ராம்கோபால்வர்மாவின் இந்திப் படமான ‘சத்யா-2’-வின் கதாநாயகியான அனைக்கா சோட்டி, இப்படத்தின் இன்னொரு கதாநாயகியாக தமிழில் முதல் முறையாக நடிக்கிறார்.

CS 140_11

இந்தப் படம் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியதென்பதால் படம் முழுக்க நிறைய நிஜ நாடகக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

CS 143_27

கவிஞர் வாலி அவர்கள் கடைசியாக எழுதிய பாடலான ‘கிருஷ்ண விஜயம்’ பாடல் இப்படத்தில்தான் இடம் பெற்றுள்ளது.

CS 152_06

மறைந்த நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர் இப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

CS 195_04

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

CS 84_20

‘பரதேசி’ படத்தில் சிறப்பாக உடை வடிவமைப்பு செய்து கொடுத்த பெருமாள் செல்வமும், நிரஞ்சனி அகத்தியனும் இப்படத்திற்கான நாடக உடைகளை மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்துள்ளனர்.

CS 99_15

‘அங்காடி தெரு’ வெற்றிக்குப் பின் எழுத்தாளர் ஜெயமோகன், இயக்குநர் வசந்தபாலனின் ‘காவியத்தலைவனு’க்கும் வசனம் எழுதியுள்ளார்.

kaviyathalaivan-stills

இயக்குநர் வசந்தபாலன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் பா.விஜய், குணச்சித்திர நடிகர் தம்பி ராமைய்யா, ஒப்பனைக் கலைஞர் ‘பட்டணம்’ ரஷீத், எடிட்டர் பிரவீன், காஸ்ட்யூமர் செல்வம் என பல்வேறு தேசிய விருது பெற்ற ஏழு கலைஞர்கள் இப்படத்தில் பங்காற்றியுள்ளனர் என்பதே இப்படத்திற்குக் கிடைத்திருக்கும் முத்தாய்ப்பான சிறப்பம்சமாகும்.

CS 69_26

Our Score