‘காவியன்’ படத்தின் போஸ்டரை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்..!

‘காவியன்’ படத்தின் போஸ்டரை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்..!

2-M cinemas நிறுவனத்தின் தயாரிப்பாளரான  K.V. சபரீஷ் தயாரித்துள்ள புதிய படம் ‘காவியம்’.

இந்தப் படத்தில் நடிகர் ஷாம் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஷாமுக்கு ஜோடியாக ஆத்மியா நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட்  நடிகர் ஜெஸ்டின் விகாஸ் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார், இசை – ஷ்யாம் மோகன், பாடல்கள் – மோகன்ராஜ், கலை – T.N.கபிலன், நடனம் – விஷ்ணு தேவா, படத் தொகுப்பு – அருண் தாமஸ், மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – 2-M cinemas K.V. சபரீஷ், எழுத்து, இயக்கம் –சாரதி.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரம்மாண்டமான செலவில் இந்தப் படம் உருவாகி வருகிறது. ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்று பெயர்  சூட்டப்பட்டுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டார்.

மோஷன் போஸ்டர், டிரைலர் இரண்டையும் பார்த்த அவர் நன்றாக  இருப்பதாக சொல்லி  படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Our Score