full screen background image

மஹத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ திரைப்படம்!

மஹத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ திரைப்படம்!

ஸ்ரீவாரி பிலிம் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் ‘காதலே காதலே’.

இந்தப் படத்தில் மஹத் ராகவேந்திரா மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை  கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், வி.டி.வி கணேஷ், ரவீனா ரவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

‘சீதா ராமம்’ படத்தின் ரொமாண்டிக் ஹிட் இசைக்குப் பிறகு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அப்படியான ஒரு இசையைத் தரவுள்ளார். சுதர்சன் கோவிந்தராஜன் (ஒளிப்பதிவு), எம்.எஸ். சாகு (கலை), மற்றும் தியாகு (படத் தொகுப்பு) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் உள்ளனர்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஆர்.பிரேம்நாத் எழுதி இயக்குகிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஆர்.பிரேம்நாத் கூறும்போது, “மஹத் ராகவேந்திராவுக்கு அனைத்துத் தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.  கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையை டெவலப் செய்த பிறகு, இந்த கதாபாத்திரங்களுக்கு மஹத்தும், மீனாட்சியும் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று நான் உணர்ந்தேன்.

அனைவரின் வாழ்க்கையிலும் இளமை பருவத்தில் இருந்து முதுமைவரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காதல் இருந்து வருகிறது. இருப்பினும், காதலில் விழுவதும் அந்தத் துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது.

இந்தக் ‘காதலே காதலே’ திரைப்படம் தற்போதைய தலைமுறையினரின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்க இருக்கிறது.  பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதல் கொண்டாட்டமாக இந்தப் படம் இருக்கும்..” என்றார்.

Our Score