தமிழில் ‘மனுநீதி’, ‘காசு இருக்கணும்’, ‘சவுண்ட் பார்ட்டி’, ‘எங்க ராசி நல்ல ராசி’ மற்றும் வி.சேகர் இயக்கத்தில் ‘என் தீ தர்பார்’, ‘சூப்பர் சாஸ்திரி’ போன்ற கன்னடப் படங்களை தயாரித்தவர் நடிகர் ஜி.ஆர்.
இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடிகராக தன் வாழ்கையை துவக்கியவர். ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கும்நாம்’, மலையாளத்தில் ‘கண்மணிகள்’ உட்பட 75 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர்.
இவர் தனது ஜி.ஆர். கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “காதலி காணவில்லை”. இதே படம் கன்னடத்திலும் “பீஷ்மர்” என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் ‘பொல்லாதவன்’ கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹார்திகா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் ஜி.ஆர் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – தயாள் ஓஷா
கலை – சுந்தர்ராஜன்
எடிட்டிங் – தேவராஜ்
நடனம் – ராஜு
தயாரிப்பு – ஆர்.பி.பூரணி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள் ரவி – ராஜா என்ற இரட்டையர்கள்.
படம் பற்றி இயக்குனர்களிடம் கேட்டோம்…. “நாங்கள் இருவரும் இணைந்து பதினெட்டு படங்களை இயக்கி இருக்கிறோம். இதில் காதல் புனிதமானது என்கிற ஒற்றை வரிக் கதையை விறுவிறு திரைக்கதையாக்கி இருக்கிறோம் ஆக்சன் மற்றும் காதல் கதையாக காதலி காணவில்லை. வித்தியாசமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சென்னை, பெங்களூர், தர்மபுரி, அரூர் மற்றும் மாதேஸ்வரம் மலை, பாங்காக் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. வரும் தீபாவளிக்கும் படம் ரிலீஸாகும்..” என்றார்கள்.