ஜெகோவா பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோஸ்வா தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘காதல் பஞ்சாயத்து’.
இந்த படத்தில் ‘ரைட்’ என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். மற்றும் சிங்கமுத்து, ரோபோசங்கர், வடிவேல் பாலாஜி, வி.எஸ்.ராகவன், ராஜசேகர்,சார்மிளா,ஷகிலா, டைனோசர் ராஜன், வில்லனாக தேவராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். காமெடி கதாப்பாத்திரங்களில் சிராலி, சூர்யசந்திரஹாசன் ஆகியோரும் அறிமுகமாகிறார்கள்.
பி.சி.ஸ்ரீராம் உதவியாளரான அருள்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜான்சன் இசையமைக்க பாடல்களை ரகு, மாணிக்கம், ஜான்சன் மூவரும் எழுதியிருக்கிறார்கள்.
கலை – கதிர்.
நடனம் – ஜீவித்
எடிட்டிங் – சதீஷ்
ஸ்டன்ட் – பம்மல்ரவி
தயாரிப்பு மேற்பார்வை – சூர்யசந்திரஹாசன் , சிராலி
இணைத் தயாரிப்பு – ராஜேஷ்குமார்
தயாரிப்பு – ஜோஸ்வா தேவதாஸ்
எழுதி இயக்குபவர் கலைசங்கர்.
படம் பற்றி கூறும் இயக்குனர் கலைசங்கர்…. “இது முழுக்க முழுக்க காமெடி படம். ஒரு கிராமத்தில் நடக்கும் காதல் பிரச்சனைகளுக்கு கட்டப் பஞ்சாயத்து செய்யும் கதாநாயகனின் மனதும் ஒரு காதலில் சிக்கிக் கொள்கிறது. அவர்களின் காதல் ஜெய்த்ததா இல்லையா? என்பது கதை !இதை எப்படியெல்லாம் நகைச்சுவையாக சொல்ல முடியுமோ அப்படி சொல்லி இருக்கிறோம்…” என்கிறார் இயக்குனர் கலைசங்கர்.