‘காதல் அகதி’ படத்திற்காக சமணர்கள் குகைக்குள் சண்டை காட்சி..!

‘காதல் அகதி’ படத்திற்காக சமணர்கள் குகைக்குள் சண்டை காட்சி..!

ராமய்யா சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம். ராமய்யா அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘காதல் அகதி’.

இதில் ஹரிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மற்றும் பாண்டியராஜன், பிளாக் பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மைசூர் மஞ்சுளா, மனோகர், திருச்சி பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகன், நாயகியாக சுதர்சன், மம்தா நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஷ்யாம்ராஜ், இசை    –   பர்கான் ரோஷன், கலை   –  பத்மநாபன், எடிட்டிங்   –  அஹமத், நடனம்   –   ராதிகா, ஸ்டண்ட்   –  மிரட்டல் செல்வம், பாடல்கள்   –   விவேகா, தயாரிப்பு மேற்பார்வை   –   கார்த்திகேயன், நிர்வாக தயாரிப்பு   –   சிவகுமார், தயாரிப்பு    –  ஓசூர் எம்.ராமய்யா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷாமி திருமலை.

படம் பற்றி பேசிய இயக்குநர் ஷாமி திருமலை, “படத்தின் முக்கியமான சண்டை காட்சியை பரபரப்பான லொக்கேசனில் படமாக்கினோம்.

ஓசூர் அருகே பத்ரகாசி என்ற ஊரில் சமணர்கள் பயன்படுத்திய குகை ஒன்று உள்ளது. அந்த குகையின் நுழைவு வாயில் ரொம்பவும் சின்னது. ஒரு ஆள் உள்ளே போவதே ரொம்பவும் கடினம். ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளே போனால் அங்கே நூறு பேர் இருக்கலாம். அப்படியொரு வசதி கொண்டது. ஆனால் காற்று வராது, வெளிச்சம் இருக்காது.

அந்த குகைக்குள் ஹீரோ ஹரிகுமார் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை நான்கு நாட்கள் படமாக்கினோம். நூற்றுக்கு மேற்பட்ட தீவட்டிகளை கொளுத்தி அந்த வெளிச்சத்தில்தான் படமாக்கினோம். தீவெட்டி வெளிச்சத்தின் சூடு, காற்று வசதி இல்லாத சூழ்நிலை. நிறைய பேர் மூர்ச்சையாகி கீழே விழுந்துவிட்டார்கள். இதையெல்லாம் மீறி படக் குழுவினர் அனைவரும் இந்தப் படப்பதிவின்போது சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.  எல்லா பிரச்னைகளும் அந்த சண்டை காட்சியை திரையில் பார்த்தபோது போயே போச்சு.. அந்த சண்டை காட்சி அவ்வளவு பிரமாதமாக வந்துள்ளது…” என்றார்.

படம் விரைவில் திரைக்கு வருகிறதாம்.  

Our Score