full screen background image

ஹரிக்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘மதுரை மணிக்குறவன்’ திரைப்படம்

ஹரிக்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘மதுரை மணிக்குறவன்’ திரைப்படம்

காளையப்பா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் G.காளையப்பன் தயாரித்து வில்லனாக நடிக்கும் படம் ‘மதுரை மணிக்குறவன்’.

இந்தப் படத்தில் தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’ போன்ற படங்களின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்க,  மாதவி லதா கதாநாயகியாகி நடித்திருக்கிறார்.

மேலும்  G.காளையப்பன், சுமன், பருத்தி வீரன்’ சரவணன்,  ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், ‘பருத்தி வீரன்’ சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே சுந்தர், அனு மோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – இளையராஜா,  பாடல்கள் – முத்துலிங்கம்,  ஒளிப்பதிவு – டி.சங்கர்,  படத் தொகுப்பு – வி.டி.விஜயன், சண்டை இயக்கம் – ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார்,  நடனம்  – தினா, அபிநயஸ்ரீ, தயாரிப்பு G.காளையப்பன், வசனம் – வெற்றி விஜய், கதை. திரைக்கதை, இயக்கம் – ராஜரிஷி, 

அண்ணன் தம்பி   இருவர் தங்களது பகைமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இறந்து விடுகின்றனர். நிறை மாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவி அதிர்ச்சியில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுவிட்டு இறந்து விடுகிறாள்.

அநாதையாக்கப்பட்ட அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை அந்த வீட்டு பணிப்பெண் வளர்க்கிறாள். மற்றொரு குழந்தையை ஒரு போலீஸ்காரர் வளர்க்கிறார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட கொலைக் குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த ஊருக்கு வருகிறார். விசாரணையில் இறந்து போனவர்கள் தன் அப்பாவும், சித்தப்பாவும் என்று தெரியவர அவர் பெரிதும் மனமுடைகிறார்.

அதே நேரம் தன் கூடப் பிறந்தவர் மதுரையில் இருக்கிறார் என தெரிந்த பின் பெரும் மகிழ்ச்சி அடைகிறார். இந்த கொலைக் குற்றங்களை செய்தது யார்..? தன் உடன் பிறந்த சகோதரனை சந்தித்தாரா..? என்பதை திடீர் திருப்பங்களுடன் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் சொல்லும் கதை இது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி, குரங்கினி, சுருளி, பாகனேரி, புல்வநாயகி அம்மன் கோயில் போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

Our Score