மித்து மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.ஜெயராமன் தயாரிக்கும் படம், ‘காக்கிசட்டை காஞ்சனா’. இந்தப் படத்தில் ஆயிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
வசனம் – பாலு, பாடல்கள் – செங்கதிர்வாணன், தயாரிப்பு மேற்பார்வை – ஜி.ஆறுமுகம், தயாரிப்பு – கே.ஜெயராமன், இயக்கம் – பி.ஆனந்தம்ராஜூ.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் பி.ஆனந்தம்ராஜூ, “தமிழ்த் திரையுலகில் என்றுமே போலீஸ் பற்றிய படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. அதனால்தான் அனைத்து நாயகர்களும், நாயகிகளும் எப்படியும் ஒரு படத்திலாவது போலீஸாக நடித்துவிட வேண்டும் என துடியாய் துடிக்கின்றனர்.
இந்த வருடம் ‘காக்கி சட்டை’, ‘தனி ஒருவன்’, ‘என்னை அறிந்தால்’, ‘பாயும் புலி’ என வரிசையாக ஹிட் அடித்த போலீஸ் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் அடுத்து வரவிருக்கும் படம்தான் இந்த ‘காக்கிசட்டை காஞ்சனா’. இதில் ஆயிஷா என்ற புதுமுக நடிகை, இன்ஸ்பெக்டர் காஞ்சனாவாக அற்புதமாக நடித்திருக்கிறார். வைஜெயந்தி ஐ.பி.எஸ். விஜயசாந்தி போல் இந்த ஆயிஷாவும் நிச்சயம் ரசிகர்களின் பாராட்டினை பெறுவார் என்று நம்புகிறோம். தமிழகம் முழுவதும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் வெளியிடுகிறது. மிக விரைவில் இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது..” என்றார்.