full screen background image

கல்யாணத்திற்குப் பிறகான காதலைச் சொல்லும் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம்

கல்யாணத்திற்குப் பிறகான காதலைச் சொல்லும் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம்

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.

புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர்.ஜே.விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

காதல் கதைகள் அரிதாகி வரும் இன்றைய தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை விழா திரை பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொள்ள… பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் இயக்குநரான ராகவ் மிர்தாத் பேசும்போது, “என் அப்பா, அம்மாவுக்கு நன்றி. என் மனைவிக்கு மிக்க நன்றி. அவர்கள் ஆதரவில்தான் நான் இங்கு இருக்கிறேன். ஸ்போர்ட்ஸில் லவ் ஆல்’ சொல்லி துவங்குவது போல்தான் இந்தப் படத்தைத் துவங்கியுள்ளேன்.

இந்தப் படம் கல்யாணத்திற்கு பிறகான காதலை சொல்லும் படம். அன்புதான் இந்தப் படத்தின் அடிப்படை. மெச்சூரிட்டியை புரிந்து கௌஷிக் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர், ஹெரோஷினி இருவரும் கண்டிப்பாக பாராட்டை பெறுவார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகப் பெரிய அளவில் உழைத்துள்ளார்கள்.  இந்தப் படத்தில் ஹரி மிக அற்புதமான இசையை தந்துள்ளார். கண்டிப்பாக இசை மிகப் பெரிய அளவில் பேசப்படும். அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் நன்றி.” என்றார்.

இந்தக் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.

Our Score