ஜெய் இந்திரா முவீஸ் சார்பில் ஏ.பி.ஆர். தயாரிப்பில் ஐ. உமாசேகர் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலக்கட்டம்’.
பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த பவன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகனாக கோவிந்த் அறிமுகமாகிறார். கதாநாயகியாக சத்யஸ்ரீ அறிமுகமாகியுள்ளார். மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கானா பாலா, உமா, ரஞ்சன், கிங்காங், ஆனந்தி, கொட்டாங்குச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவு – பி.எம்.எழில் அரசன்
இசை – ஏ.ஆர்.மகேந்திரன்
படத் தொகுப்பு – கே.சங்கர்
நடனம் – விஜி சதீஷ்
சண்டை பயிற்சி – டான் அசோக்
தயாரிப்பு மேற்பார்வை – ராஜேந்திரன்
இணை தயாரிப்பு – ஐ.உமாசேகர்
தயாரிப்பு – ஏ.பி.ஆர்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – கே.பாஸ்கர்
ஒரு மீனவனும், ஒரு நடனக் கலைஞனும் இணை பிரியாத நண்பர்கள். அவர்களில் ஒருவருக்கு திருமணம் நடந்த பின்னும் இவர்களது நட்பு தொடர்கிறது. நடபுக்கு உதாரணமாக இருந்த இவர்களுக்குள் ஒரு கட்டத்தில் விரிசல் ஏற்படுகிறது. கஈரணம்..? தன் மனைவியையும், நண்பனையும் இனணத்து வெளியே தவறாகப் பேசுவதால் தன் நண்பனை நிரந்தரமாகப் பிரிகிறான். பிறகு என்ன நிகழ்கிறது என்பதுதான் இந்தக் ‘காலக்கட்டம்’ படத்தின் கதை.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘உன்னால் மயிலே’ என்ற பாடலை கானா பாலா பாடியிருக்கிறார். பாடலை பாடி முடித்துவிட்டு, “இந்தப் பாடல் மிக அற்புதமாக வந்திருக்கிறது. எனக்கு முழு திருப்தி. அதனால் நான் பேசிய சம்பளத்தில் பாதியைக் கொடுத்தால் போதும்..” என்றாராம் கானா பாலா. இதைக் கேட்டு இயக்குநர் இசையமைப்பாளர் இருவருக்கும் மிகுந்த சந்தோஷம். “இன்றைய சூழ்நிலையில் பேசிய சம்பளத்தில் குறைத்துக் கொடுங்கள் என்று கேட்பதற்கு எத்தனை பேருக்கு மனம் வரும்..?” என்கிறார் இயக்குநர்.
“கோவளத்தில் மீன் மார்க்கெட் அருகில் எடுத்த சண்டை காட்சிக்காக மதுபான கடை செட் போடப்பட்டது. அது ஒரிஜினல் கடைன்னு நினைச்சு நிறைய பேர் சரக்கு கேட்டு வந்துட்டாங்க. அந்த அளவுக்கு ஆர்ட் டைரக்டர் த்த்ரூபமா அந்தக் கடையை அமைச்சிருந்தாரு..” என்று கலை இயக்குநரையும் பாராட்டுகிறார் இயக்குநர்.
“படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சாருக்கு செல்லும் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த மாத இறுதியில் படம் திரைக்கு வரும்..” என்கிறார் இயக்குநர்.