நடிகை திரிஷா நேற்று வெளியிட்ட ஒரு டிவிட்டீல் தான் திருமணத்திற்குத் தயாராகிவிட்டதை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
பத்து நிமிடங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள டிவீட்டில் வரும் 23-ம் தேதியன்று தனக்கும் தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான வருண் மணியனுக்குமான திருமண நிச்சயத்தார்த்தம் நடக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனராம்.
இதைத்தான் நாங்களும் முன்னாடியே சொன்னோம். கல்யாணம் நடக்கப் போறதையாச்சும் ஒத்துக் கொண்டிருக்கலாம். நிச்சயமெல்லாம் நடக்கலை. ஆனா மாப்ளை அவர்தான் என்பதையாவது சொல்லியிருக்கலாம்.
“என் கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா அது உங்களுக்குத் தெரியாமல் நடக்காது..” என்று பூசி, மெழுகி இன்றைக்கு ‘ஆமாம்’ என்கிறார் திரிஷா.
சரி.. எப்படியோ.. எங்கேயிருந்தாலும் நல்லாயிருந்தால் சரிதான்..!
அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள் மேடம்..!