full screen background image

விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் உருவாகும் ‘காக்கி’ திரைப்படம்

விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் உருவாகும் ‘காக்கி’ திரைப்படம்

ஓபன் தியேட்டர்ஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காக்கி’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டு வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர்.

‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். 

தயாரிப்பு – தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் (ஓபன் தியேட்டர்ஸ்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அ.செந்தில் குமார், ஒளிப்பதிவு – மனோஜ் பரம்ஹம்சா, இசை – அவ்ஹத், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, படத் தொகுப்பு – ரூபன், கலை – குமார், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இதுவரையிலான தமிழ்ச் சினிமா வரலாற்றில் காவல்துறை பின்னணியில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த ‘காக்கி’ திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ‘காக்கி துணி’யை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும். காவல் துறையினரைப் பற்றி முற்றிலும் புதிய கோணத்தில் சொல்ல இருக்கிறது இந்த ‘காக்கி’ திரைப்படம்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை ஏவி.எம். ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தின் முதல் காட்சியை திருமதி.பாத்திமா விஜய் ஆண்டனி துவக்கி வைத்தார்.

Our Score