full screen background image

‘சத்ரு’ – மார்ச் 8-ம் தேதி வெளியாகிறது..!

‘சத்ரு’ – மார்ச் 8-ம் தேதி வெளியாகிறது..!

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டர்டெயின்மெண்ட்  பட நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர்கள் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சத்ரு.’ 

இந்தப் படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்திருக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன்,  நீலிமா,  மாரிமுத்து,  ரிஷி,  சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம்,  ரகுநாத், கீயன், சாது,  குருமூர்த்தி,  பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.    

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – அம்ரிஷ், பாடல்கள்   – கபிலன்,  மதன் கார்க்கி, சொற்கோ, படத் தொகுப்பு – பிரசன்னா.ஜி.கே., கலை இயக்கம் –  ராஜா மோகன், சண்டை இயக்கம் – விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  நவீன் நஞ்சுண்டான்.   

படம் பற்றி இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் பேசும்போது, “இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

இந்த படத்தில் கதிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். ஆனால், இது முழுமையான போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த பரபரப்பான சம்பவங்கள்தான் படம்.

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை சப்-இன்ஸ்பெக்டர் கதிர்  24  மணி நேரத்தில் எப்படி  தேடி பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. படம் துவக்கத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாக செல்லும்வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

மைல்ஸ்டோன் மூவிஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.டில்லிபாபு வரும் மார்ச் 8-ம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்…” என்றார்.

Our Score