காக்கா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கா.. கா.. கா..’ திரைப்படம்..!

காக்கா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கா.. கா.. கா..’ திரைப்படம்..!

அர்பிதா கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் ‘கா.. கா.. கா..’ படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.

இந்தப் படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார் மேகாஸ்ரீ என்ற புதுமுகமும், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார், இவர்களுடன் நாசர் மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயசுதாவும் நடிக்கிறார், குழந்தை நட்சத்திரம் யுவினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,

இந்தப் படத்தின் பூஜை இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் இருக்கும் புதிய பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தலைமை தாங்கி படத்தினை துவக்கி வைத்தார். இந்த துவக்க விழாவில் நடிகர் நாசர், அசோக், ஹீரோயின் மேகாஸ்ரீயும் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் கதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையம்சம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாம், மேலும் இப்படத்தில் ‘காக்கா’வும் ஒரு முக்கிய கேரக்டராக வருகிறதாம். அதனாலேயே இப்படத்திற்கு “கா..கா..கா” என காக்கா எழுப்பும் சத்தம் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர்,

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பாண்டிச்சேரி  மற்றும் விசாகப்பட்டிணத்தில் நடைபெற இருக்கிறது.

Our Score